திடீர் திடீரென டிரெண்டாகும் டயட் முறைகள் பற்றியும், அவற்றின் சாதக பாதகங்கள் பற்றியும் பார்த்தோம். இப்போது மேலும் சில ஃபேடு டயட் முறைகள் பற்றி அலசுவோம்.

பேகன் டயட்

பேலியோவும் வீகனும் இணைந்த டயட் இது. டாக்டர் மார்க் ஹைமென் என்பவரின் கண்டுபிடிப்பு.

சாதகங்கள்

இந்த டயட்டின் பெரும்பான்மை உணவுகள் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பிரதானமாகக் கொண்டவை. காய்கறிகளும் பழங்களும் அத்தியாவசிய நுண்சத்துகளும், நார்ச்சத்தும், நோய் எதிர்ப்புத் திறனும் கொண்டவை என்பது தெரிந்தாலும், அவற்றைப் பிரதானமான, முழுமையான உணவாக உட்கொள்ளும் நபர்கள் அரிதானவர்கள். அவர்களுக்கு இந்த டயட் ஏற்றது.

சால்மன் அல்லது டியூனா வகை மீன்கள், நட்ஸ், சீட்ஸ், அவகாடோ என ஆரோக்கியமான கொழுப்புள்ள உணவுகள் மட்டுமே அனுமதிக்கப் படுவதால் இந்த டயட், இதய ஆரோக்கியத்துக்கு உகந்தது.

சைவம், அசைவம் என இரண்டு வகையான புரதங்களுக்கும் இதில் அனுமதி உண்டு. எனவே வெரைட்டியாகச் சாப்பிடுகிற உணர்வும் கிடைக்கும்.

பாதகங்கள்

குளூட்டன் ஃப்ரீ உணவுகளே இதில் பரிந்துரைக்கப்படுகின்றன.

பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக் கடலை போன்றவற்றைக் குறைவாகவே எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதனால் இவற்றின் மூலம் கிடைக்கும் ஊட்டமும் குறைகிறது.

பால் உணவுகளுக்கு அனுமதியில்லை என்பதால் பேகன் டயட்டைப் பின்பற்றுவோருக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

ரா ஃபுட் டயட்

1800-களிலிருந்தே இருக்கும் டயட் இது. 115 முதல் 118 டிகிரிக்கு மேல் சூடாக்கப் படாத, சமைக்கப்படாத உணவுகளே ‘ரா ஃபுட் டயட்’ என்கிறார்கள் இதை அறிமுகப்படுத்திய ‘நேச்சுரல் ஹைஜீன்’ இயக்கத்தினர். ஊட்டங்களும் நொதிகளும் அழியாமலிருப்பதால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த டயட்டில் பழங்கள், காய்கறிகள், நட்ஸ், சீட்ஸ், முளைகட்டிய தானியங்கள், ஊறவைத்த பருப்புகள் போன்றவையே பிரதான உணவுகள். 100 சதவிகித தாவர உணவுகளே இடம்பெறுவதால் இதுவும் கிட்டத்தட்ட `வீகன் டயட்' போன்றதுதான். ஆனாலும், இதைப் பின்பற்றும் சிலர் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் பச்சையாக எடுத்துக்கொள்வதுண்டு.

சாதகங்கள்

உணவுகளைச் சமைக்கும்போது அவை வெளிவிடும் கார்சினோஜென் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இரண்டும் ஆரோக்கியத்தை பாதிப்பவை. ரா ஃபுட் டயட்டில் உணவுகள் சமைக்கப்படுவதில்லை என்பதால், இந்த ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

இந்த டயட்டில் எடுத்துக்கொள்ளப்படும் உணவுகள் சுத்திகரிக்கப்படாதவை மற்றும் பதப்படுத்தப்படாதவை என்பதால், உடலில் தேவையற்ற கொழுப்பும் உப்பும் சேராது.

ரா ஃபுட் டயட்டில் நார்ச்சத்தும் ஆரோக்கிய மான கொழுப்பும் அதிகம்.

உள்ளூரில் விளைவிக்கப்பட்ட, ஆர்கானிக் உணவுகளைத் தேடிச் செல்வதால் சூழல் பாதுகாப்புக்கும் நன்மை விளைகிறது.

பாதகங்கள்

வைட்டமின் பி12, வைட்டமின் டி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலக் குறைபாடுகள் ஏற்படுவது இதில் சகஜம். ரா ஃபுட் டயட்டை தீவிரமாகப் பின்பற்றும் பலருக்கும் எலும்பு அடர்த்திக் குறைபாடும், அதன் விளைவாக ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

அசைவ உணவுகளைச் சமைக்காமல் சாப்பிடுகிறவர்களுக்கு அதன்மூலம் ஃபுட் பாய்சனிங்கும், இரைப்பை குடல் அழற்சியும் ஏற்படக்கூடும்.

சில காய்கறிகள் சமைக்கும் போது தான் சத்துகளைத் தரும். உதாரணத்துக்கு கேரட்டில் உள்ள கராட்டினாய்டு, தக்காளியிலுள்ள லைக்கோபீன் போன்றவை. சமைப்பதே தவிர்க்கப்படுவதால் இந்தச் சத்துளையும் முழுமையாகப் பெற முடியாமல் போகும்.

சமைக்காத உணவுகளைவிட, சமைத்த உணவுகளே செரிமானத்துக்கு ஏற்றவை.

ரா ஃபுட் டயட்டானது எல்லோருக்கு மானது அல்ல. அதிக நார்ச்சத்துள்ள இவ்வகை உணவுகள், செரிமானப் பாதையில் பிரச்னை உள்ளவர்களுக்கும், சிலவகை நொதிகள் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்றதல்ல.

ஐபிஎஸ் எனப்படும் `இன்ஃப்ளமேட்டரி பவல் சிண்ட்ரோம்' பாதிப்பு மற்றும் குடல் புண் பிரச்னை உள்ளவர்களுக்கு சமைத்த உணவுகளே சிறந்தவை.

உணவிலுள்ள சத்துகளைச் செரிக்க இயலாமல்போனால் உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்காமல் நோய்களுக்கு உள்ளாக நேரிடும்.

இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங்

உணவு இடைவேளைகளுக்கு இடையில் குறிப்பிட்ட மணி நேரம் கால அவகாசம் இருப்பது அல்லது உட்கொள்ளும் கலோரிகளின் அளவைக் குறைப்பது, குறிப்பிட்ட மணி நேரம் வரை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது போன்றவை இதில் அடக்கம். பாரம்பர்ய விரத முறைகளே இதற்கு அடிப்படை. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, குறைந்த கலோரிகளே உட்கொள்ளப்படும்போது மனத்தளவில் உடல் அதற்குப் பழகிவிடும். எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.

சாதகங்கள்

பருமன் குறையும்.

தொடர்ந்து விரதமிருக்கும்போது குடலியக்கத்துக்கு ஓர் ஓய்வு கிடைக்கிறது. அந்த நேரத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றலை சேமித்துவைத்திருக்கும் கொழுப்பிலிருந்து உடல் பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்.

விரதமிருக்க பிரத்யேக முன் தயாரிப்புகள் தேவையில்லை.

பாதகங்கள்

பசி உணர்வு பலரையும் படுத்தியெடுக்கும்.

விரதத்தை முடித்ததும் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது சிலருக்கு வழக்கமாகி விடும். அட்ரீனல் மற்றும் தைராய்டு சுரப்புகளில் பாதிப்புகள் இருப்போர் மருத்துவ ஆலோசனையின்றி விரதமிருக்கக் கூடாது.

அட்கின்ஸ் டயட்

இதயநோய் மருத்துவர் ராபர்ட் சி அட்கின்ஸ் என்பவரால் 1960-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இது. கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்து கொழுப்பு மற்றும் புரதத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தும் டயட் இது. வாழ்நாள் முழுவதும் பின்பற்ற ஏதுவான டயட் என இதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. அட்கின்ஸ் டயட்டில் நான்கு நிலைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை...

முதல் நிலை

முதல் இரண்டு வாரங்களுக்கு வெறும் 20 சதவிகித அளவுக்கு மட்டுமே கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இரண்டாம் நிலை

மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸை மெள்ள மெள்ள உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் நிலை

எடைக்குறைப்பில் உங்கள் இலக்கை நெருங்கும்போது கொஞ்சம் கார்போஹைட்ரேட்டையும் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. அதாவது கார்போஹைட்ரேட்டைச் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்த பிறகும் எடைக் குறைப்பு தொடரும். ஆனால், அதன் வேகம் குறைவாக இருக்கும்.

நான்காம் நிலை

ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் அளவோடு உண்பது. இதன் மூலம் கார்போஹைட்ரேட்டையும் தவிர்க்க வேண்டியதில்லை. எடையும் சீராக இருக்கும்.

சாதகம்

முதல் இரண்டு வாரங்களிலேயே எடைக் குறைப்பில் மாற்றம் தெரியும்.

பாதகங்கள்

கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைப்பதால், குடும்பப் பின்னணியில் இதயநோய்கள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்றவை உள்ளவர்களுக்கு இது ஏற்றதல்ல.

சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் உள்ளோருக்கும் இது ஏற்றதல்ல.

முதல் சில நாள்களுக்கு நார்ச்சத்து அறவே தவிர்க்கப்படுவதால் இந்த டயட்டைப் பின்பற்றும் சிலருக்கு கடுமையான மலச்சிக்கல் பாதிப்பு வரலாம்.

எந்த டயட் நல்ல டயட்?

சரி... தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வருவோம். இத்தனை டயட் முறைகள் இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற டயட் எது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? இந்த விஷயத்தில் உங்கள் அபிமான நடிகர், நடிகைகளோ, விளையாட்டு வீரர்களோ பின்பற்றுவதை நீங்களும் அப்படியே கண்மூடித்தனமாகச் செய்வது சரியல்ல.

முதலில் பொது மருத்துவரைச் சந்தித்து முழு உடல் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். அதன்பிறகு முறையாகப் பயிற்சிபெற்ற டயட்டீஷியனை அணுகுங்கள். உங்கள் வாழ்க்கை முறை, பட்ஜெட் மற்றும் ஆரோக்கியத்தில் உங்கள் இலக்கு போன்றவற்றுக்குப் பொருந்திப்போகும் டயட் முறையைக் கேட்டுப் பின்பற்றுங்கள். எடையைக் குறைப்பதை மட்டுமே தற்காலிக லட்சியமாகவோ, உடனடி இலக்காகவோ வைத்துக்கொள்ளாமல், நீண்டகால ஆரோக்கியத்தை கவனத்தில்கொண்டு டயட்டைப் பின்பற்றத் தொடங்குங்கள். அப்போதுதான் உங்கள் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும், மக்கர் பண்ணாமல்!

- நம்மால் முடியும்!