Published:Updated:

கோவிட்: `நீண்ட தூர விமானப் பயணங்களுக்கு முகக்கவசம் போடுங்க’ - உலக சுகாதார நிறுவனம் அறிவுரை

விமான நிலையம்!
News
விமான நிலையம்! ( pixabay )

நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நீண்ட தூர விமானப் பயணம் மேற்கொள்வோர், முகக்கவசம் அணிவதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க் கிழமையன்று தெரிவித்துள்ளது.

முகக்கவசம், தடுப்பூசிகள், பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் கோவிட் தொற்று பரிணமித்துக் கொண்டே அதன் வேரியன்ட்டுகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரானின் துணைப் பிரிவு திரிபு அமெரிக்காவில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

ஒமிக்ரான்
ஒமிக்ரான்
pixa bay

அமெரிக்காவின் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் சுமார் 27.6 சதவிகித மக்கள், ஒமிக்ரானின் துணை வேரியன்ட்டான XBB.1.5 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நீண்ட தூர விமானப் பயணிகள் முகக்கவசம் அணிவதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளது. 

WHO - உலக சுகாதார நிறுவனம்
WHO - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி கேத்தரின் ஸ்மால்வுட் கூறுகையில், `` பயணிகள் நீண்ட தூர விமானப் பயணங்கள் போன்ற அதிக ஆபத்துள்ள தருணங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட வேண்டும். கோவிட் தொற்று பரவலாகக் காணப்படும் பகுதிகளில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இது ஒரு பரிந்துரையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.