Published:Updated:

``காதலாலும் சாதியாலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறேன் ..." கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

வ.ஐ.ச.ஜெயபாலன்
News
வ.ஐ.ச.ஜெயபாலன் ( கிராபியென் ப்ளாக் )

வாழ்வு சார்ந்த தோல்விகள், மனஅழுத்தங்களை எதிர் கொள்ளும்போதெல்லாம் எழுத்து, கவிதை, இயற்கை, ஆர்வம், காதல் என தப்பிக்க வேறு ஏதாவது ஒரு கதவு திறந்தது. ஒரு துறை சார்ந்து மட்டும் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்... ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவர் எழுதிய ‘சூரியனோடு பேசுதல்’, `நமக்கென்றொரு புல்வெளி’, `ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’, `ஒரு அகதியின் பாடல்’, `வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள்’ உள்ளிட்ட படைப்புகள் மிக முக்கியமானவை.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் நெருங்கிய நண்பர் ஜெயபாலன். பாலு மகேந்திராவின் சிஷ்யரான வெற்றிமாறன் இயக்கிய `ஆடுகளம்’ திரைப்படத்தில் `பேட்டைக்காரர்' பாத்திரத்தில் நடித்து, புகழ்பெற்றார். `தன்னைத் தேடி வரும் பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது' என்கிற கொள்கையில் இருப்பவர். தற்போது, சென்னை பெசன்ட்நகர் கடற்கரைப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். மாடியில் சிறிய தோட்டம் ஒன்றை அமைத்துப் பராமரிக்கிறார். கடலை பார்த்தபடியே நம்மிடம் பேசினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``இலங்கையரான நாங்கள் வாழ்க்கையில் 30 வருடங்களைப் போரில் இழந்திருக்கிறோம். அதற்கு முந்தைய இளமையையும் போருக்குப் பிந்தைய முதுமையையும்கூட இனஒடுக்குதல் சூழலிலோ அல்லது புலம்பெயர்ந்த சூழலிலோதான் வாழவேண்டியிருக்கிறது. விடுதலைக்கான போராட்டத்தில் உடலையும் மனதையும் தாக்குப்பிடித்து வாழ்வது எங்களுடைய விதியாக இருக்கிறது.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

அக வாழ்க்கையில் காதலால் மனஅழுத்தம் வந்திருக்கிறது. புறவாழ்க்கையில் சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் தந்தையுடன் மோத நேர்ந்தது. அத்துடன் தொடர்ந்த இன விடுதலைப் போராட்டங்களால் தமிழர் எம் வாழ்வையும் வாய்ப்பையும் மறுத்ததால் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. புலம்பெயர்வதால் ஏற்படும் பிரிவு சார்ந்த மனஅழுத்தம் எப்போதும் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இலக்கியத்தில் `பிரிவு' என்பது பாலை நிலத்தின் இயல்பு. போர் நிலமும் பாலைதானே. வீரம் விழையும் பாலை. தொடர் மரணங்களும் தவிர்க்கமுடியாத புலப்பெயர்வுகளும் போரில் பாலையான ஈழ மண்ணில் இயல்பு.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

போரையும் புலம்பெயர்தலையும் வெற்றியையும் தோல்வியையும் சிறுவயதிலிருந்தே எதிர்கொண்டதால் இலங்கைத் தமிழர்களான நாங்கள் அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து வாழப் பழகிவிட்டோம்.

பால்யவயதில் தோழிகளின் நட்பைக் காதலென்று நினைத்து அந்த நட்பு உடைந்தபோது ஏற்பட்ட சிறிய மனஅழுத்தங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. வளர்ந்தநிலையில் போருக்கு ஈடுகொடுத்து, சங்ககால கவிஞனைப்போல எதற்கும் அஞ்சாமல் `நெற்றிக் கண்ணைக் திறப்பினும் குற்றம் குற்றமே' என இடித்துரைப்பவனாக வாழ்ந்தேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

சமூகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்து வாழ்ந்த காலங்களில் உயிருக்கு ஆபத்து வந்தபோதுகூட நான் அவ்வளவு மனஅழுத்தங்களுக்கு ஆட்பட்டதில்லை. ஒருவேளை மனஅழுத்தங்களோடு வாழ்வதே எங்களது வாழ்க்கைமுறையாக மாறிவிட்டது என்பதே காரணமாக இருந்திருக்கலாம்.

கடைசி யுத்தத்தின்போது மிகவும் நெருக்கடியான காலத்தில் நான் வன்னியோடு தொடர்பில் இருந்தேன். அதுதான் என்வாழ்வின் மிக மோசமான மனஅழுத்தம் நிறைந்த காலம்.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு துறையில் மட்டும் இருக்கவில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே, 16 வயதில் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான வன்முறையைக் கையில் எடுக்க நேர்ந்தது. அதனால் 20 - 27 வயதுகளுக்கிடையே பலதடவை என்னை என்கவுன்டரில் கொல்ல சாதி ஆதிக்கச் சார்புக் காவல்துறை திட்டமிட்டது.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

அதன்பிறகு மீண்டும் படித்து பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவனாக தொடர்ந்து மூன்று வருடங்கள் செயல்பட்டேன். அதுவும் சவாலான வாழ்க்கையாக இருந்தது. போராளி மனம்கொண்ட நான், இன நெருக்கடிகளில், தனி மனிதனாக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தேன். மாணவனாக, போராளியாக, கவிஞனாக பல்வேறு பரிமாணங்களில் இருந்ததால் ஒரு துறை சார்ந்த நெருக்கடிக்கு இன்னொரு துறை சார்ந்த சந்தோஷங்கள் மருந்தாகின.

வாழ்வு சார்ந்த தோல்விகள், மனஅழுத்தங்களை எதிர் கொள்ளும்போதெல்லாம் எழுத்து, கவிதை, இயற்கை, ஆர்வம், காதல் என தப்பிக்க வேறு ஏதாவது ஒரு கதவு திறந்தது. ஒரு துறை சார்ந்து மட்டும் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன். ஆனால், எல்லோரையும் மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றும் அனுமனாகவும் சஞ்சீவி மலையாகவும் எப்போதும் உள்ளனரே தோழர் தோழியர்கள்.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

கடைசி யுத்தத்தின்போது மிகவும் நெருக்கடியான காலத்தில் நான் வன்னியோடு தொடர்பில் இருந்தேன். அதுதான் என்வாழ்வின் மிக மோசமான மனஅழுத்தம் நிறைந்த காலம்.

ஒரு பக்கம் கடல். மறுபக்கம் மலர்கள். இவையிரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்க்கையை எப்போதும் ரசிக்கிறேன். அதைவிட வேறு எதுவும் பெரிதல்ல என்றும் கருதுகிறேன்.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

அந்தக் காலத்தில்தான் `ஆடுகளம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. போரின் தோல்வியை உணர்ந்த ஒருதருணத்தில் படப்பிடிப்பை மறந்து மோட்டார் சைக்கிளில் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பிசாசுபோல மரணவேகத்தில் தென் தமிழகத்தில் சுற்றியிருக்கிறேன்.

தனுஷ் உடன் வ.ஐ.ச.ஜெயபாலன்
தனுஷ் உடன் வ.ஐ.ச.ஜெயபாலன்
ஸ்டில் ராபர்ட்

 இயக்குநர் வெற்றிமாறன் துரோணரைப் போன்ற ஒரு  முழுமையான ஆசான். அவருடைய அர்ச்சுனன் தனுஷ்; ஒரு ஏகலைவனாக ஈழத்து வேட்டுவனாக நான் வெற்றிமாறனிடம்தான் நடிப்புக் கலையைப் பயின்றேன்.  

மற்றபடி இயல்பாகவே ஈழத் தமிழர்கள் மனஅழுத்தத்தை தாங்கக்கூடியவர்கள்தான். அழுத்தம் பொதுவிதியாக இருந்தாலும் அதைத் தாங்கும் ஆற்றல், வல்லமை வாய்க்கும் சூழல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது என்றே சொல்வேன்!

`நான் ஒரு அதிர்ஷ்டக்கார கவிஞன்' என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் விரும்புகிற நீலியை (கடல்) நான் காதலியாக வைத்திருக்கிறேன். கடலுக்குத் தெரியாமல் என்னுடைய மாடித் தோட்டத்தில் நிறைய பூ மற்றும் காய்கனிச் செடிகளையும் வைத்திருக்கிறேன். இப்படியொரு வாழ்க்கை எனக்குக் கிடைத்திருப்பதை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

வ.ஐ.ச.ஜெயபாலன்
வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

ஒரு பக்கம் கடல். மறுபக்கம் மலர்கள். இவையிரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்க்கையை எப்போதும் ரசிக்கிறேன். அதைவிட வேறு எதுவும் பெரிதல்ல என்றும் கருதுகிறேன். வாழ்வதுதான் பெரிது; அதுதான் இனிமையானது. தனித்தும் சமூகமாகவும் வாழ்வதுதான் கடமை. அந்த வகையில் நான் மனஅழுத்தங்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்!” என்கிறார் வ.ஐ.ச. ஜெயபாலன்.