Published:Updated:

மிரட்டலுக்குப் பயந்து ட்விட்டரில் இருந்து அனுராக் காஷ்யப் வெளியேறியது சரியா? உளவியலாளர் கருத்து!

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி கையெழுத்திட்டதற்காக, அதே கும்பல் வன்முறையால் பாதிப்புக்குள்ளாகி ட்விட்டரில் இருந்து வெளியேறியிருக்கிறார் பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப்.

சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக இயங்கி வந்தவர் அனுராக். சிறந்த திரைப்படங்கள் எந்த மொழியில் வெளியானாலும், முதல் பாராட்டு அனுராக்கிடம் இருந்துதான் வரும். பல நல்ல தமிழ்ப் படங்களை இந்தியா முழுமைக்கும்... ஏன் உலகம் முழுமைக்கும் கொண்டு சேர்த்த பெருமை அவருக்குண்டு. அப்படி, சமூக வலைதளங்களை மிக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி வந்த அவர் கடந்தவாரம், தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்துவிட்டு அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

அனுராக்கின கடைசி ட்விட்
அனுராக்கின கடைசி ட்விட்

கும்பல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு, திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் ஒன்றைக் கடந்த ஜூலை 23-ம் தேதி எழுதியிருந்தனர். அந்த விவகாரம் மிகப்பெரும் விவாதத்தைக் கிளப்பியது. திரைத்துறையிலேயே ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தது. பிரதமருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், அனுராக் காஷ்யப்பும் கையெழுத்திட்டிருந்தார். அதனால், ட்விட்டரில் அவரின் அக்கவுன்டை டேக் செய்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், அவரின் குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வரத்தொடங்கின. இதுதொடர்பாக அவர் போலீஸில் புகார் அளித்தார். கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் ட்விட்டரிலிருந்து வெளியேற முடிவு செய்தார்.

ஒருசிலர் அவருக்கு நடந்த நிகழ்வுக்கு வருத்தப்பட்டபோதும், 'அவர் ட்விட்டர் கணக்கை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது, ஒரு கவனிக்கத்தக்க திரைப்படக் கலை ஆளுமையான அவரின் இந்தச் செயல் சாமானிய மக்களிடமும் சமூக வலைதளம் குறித்த பாதுகாப்பின்மையைக் கடத்தும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு விலகிச் செல்வது சரியான தீர்வில்லை' எனப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

வெளியேறுவதற்கு முன்பாக,`உங்கள் பெற்றோர்களுக்கு போன் கால்கள் மூலம் கொலை மிரட்டல் வருவது மற்றும் உங்கள் மகள் ஆன்லைன் 'ட்ரோல்'களுக்கு இலக்காவது ஆகியவை குறித்து யாரும் பேச நினைக்க மாட்டார்கள். இதற்கு எந்த ஒரு காரணமும் இருக்கப்போவதில்லை. குண்டர்களே ஆளப்போகிறார்கள். இந்தப் புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்' என்று பதிவிட்டார்.

அனுராக்கின கடைசி ட்விட்
அனுராக்கின கடைசி ட்விட்

மற்றொரு பதிவில் `நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். ட்விட்டரை விட்டு நான் வெளியேறவிருப்பதால் இதுதான், எனது கடைசி ட்வீட்டாக இருக்கும். மனதில் நினைப்பதை அச்சமின்றி பேச அனுமதிக்கப்படாதபோது, பேசாமலே இருக்கப்போகிறேன். விடைபெறுகிறேன்' என்று பதிவிட்டார். அதன் பின்னர் ட்விட்டர் கணக்கை டெலிட் செய்துவிட்டார்.

அனுராக் எடுத்தது மிகச் சரியான முடிவே. உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. 'மாஸ்லோவின் தேவை படியமைப்புக் கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்று அதைச் சொல்வார்கள். ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் இந்தக் கோட்பாட்டை வடிவமைத்தார். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அனுராக் எடுத்த முடிவை அணுக வேண்டும்.
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

அவரின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துத் தெரிவித்தனர். ஒருசிலர் அவருக்கு நடந்த நிகழ்வுக்கு வருத்தப்பட்டபோதும், 'அவர் ட்விட்டர் கணக்கை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது, ஒரு கவனிக்கத்தக்க திரைப்படக் கலை ஆளுமையான அவரின் இந்தச் செயல் சாமானிய மக்களிடமும் சமூக வலைதளம் குறித்த பாதுகாப்பின்மையைக் கடத்தும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு விலகிச் செல்வது சரியான தீர்வில்லை' எனப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

உண்மையில் இது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். அனுராக் பிரச்னையைக் கையாண்ட விதம் சரிதானா?

''அனுராக் எடுத்தது மிகச் சரியான முடிவே. உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. 'மாஸ்லோவின் தேவை படியமைப்புக் கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்று அதைச் சொல்வார்கள். ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் இந்தக் கோட்பாட்டை வடிவமைத்தார். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அனுராக் எடுத்த முடிவை அணுக வேண்டும்'' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

தமிழ் சினிமாவின் அபத்தங்களை சினிமாவிற்குள் இருந்தே சினிமாவாக்கிய பார்த்திபன்..! #5YearsOfKTVI
தன்னுடைய பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், சமூகத்தில் கருத்துகளை முன்வைக்க அவருக்கு எப்படி மனம் வரும்? ஒருவரின் பாதுகாப்பு என்பது அவர் குடும்பத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதுதான். தன் மகளுக்கும் தாய்க்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், 'தான் பாதுகாப்பாக இல்லையோ' என்கிற உணர்வு நிலைக்குத் தற்போது அனுராக் தள்ளப்பட்டிருக்கிறார்.
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

மாஸ்லோவ்ஸ் கோட்பாடு, உடலியல் தேவைகள் (Physiological needs), பாதுகாப்புத் தேவைகள் (Safety needs), உறவுநிலை சார் தேவைகள் (Love and belongingness needs), கௌரவத் தேவைகள் (Esteem needs), தன்னிறைவுத் தேவைகள் (Self-actualization needs) எனக் கீழிருந்து மேலாக ஐந்து படிநிலைகளைக் கொண்டது. அதில் கீழ்ப்பாகத்தில் காணப்படும் மூன்று வகையான தேவைகள், 'பௌதீகத் தேவைகள்' எனவும், உயர்மட்டத்தில் காணப்படும் இரண்டு வகையான தேவைகள் 'உளவியல் தேவைகள்' எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மாஸ்லோவின் தேவை படியமைப்புக் கோட்பாடு
மாஸ்லோவின் தேவை படியமைப்புக் கோட்பாடு
Wikipedia

'உடலியற் தேவைகள்' என்பது, உணவு, காற்று, நீர், உறைவிடம் என மனிதன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைக் குறிக்கும். இந்த நிலைகள் பூர்த்தியடைந்துவிட்டால், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இரண்டாவது படிநிலையை நோக்கி மனம் நகரும். அதாவது தொழிலுக்குப் பாதுகாப்பு, உயிருக்குப் பாதுகாப்பு, உடமைக்குப் பாதுகாப்பு, வன்முறையற்ற புறச்சூழல் என எந்தவிதத்திலும் அச்சுறுத்தலையோ பாதுகாப்பின்மையையோ உணராத ஒரு நிலை. அது உறுதி செய்யப்பட்டுவிட்டால், நண்பர்கள், உறவினர்களுடன் உறவுகளை மேம்படுத்துதல், பிறருக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்தல் என மூன்றாவது நிலையான சமூகத் தேவைகளை நோக்கிச் சென்றுவிடுவோம்.

'மிகப்பெரிய பிரபலம் இப்படிச் செய்யலாமா?' என்றால், மனித மனம், மனித உளவியல் எல்லோருக்கும் பொதுவானது. இதில் பிரபலம், பிரபலம் இல்லாதவர்கள் என்கிற விதியெல்லாம் கிடையாது.
மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
அச்சுறுத்தல்
அச்சுறுத்தல்

மேற்கண்ட மூன்றும் பூர்த்தியாகிவிட்டால். நான்காவது வகையான கௌரவத் தேவைகள். அதாவது தனது திறமை, செயல்பாடுகளின் மூலமாகப் பிறரால் அங்கீகரிக்கப்படுவது, மதிக்கப்படுவது, கொண்டாடப்படுவது. அதன் மூலம் அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகருதல். இந்தத் தேவைகளும் பூர்த்தியாகிவிட்டால், சுய நிறைவு நிலையான தன்னிறைவுத் தேவைகள் நிலைக்குச் சென்று 'போதும்' என்ற மனநிலை வந்துவிடும்.

மேற்கண்ட படிநிலைகளில் தற்போது அனுராக் 'கௌரவத் தேவை' என்னும் நான்காவது படிநிலையில் இருக்கிறார். திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கும் அவர், அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். அதன் மூலம் சமூகத்தில் தனது கருத்துகளை முன்வைக்கிறார். சில விஷயங்களுக்கு எதிராகக் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், அவருக்கு நிகழ்ந்த அச்சுறுத்தல் காரணமாக, அவர் மனம் இரண்டாவது படிநிலையான 'பாதுகாப்பு நிலை'க்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

`புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்!' - ட்விட்டரை விட்டு வெளியேறிய அனுராக் காஷ்யப்
அனுராக் எடுத்திருக்கும் இந்த முடிவுக்குச் சமூகம்தான் காரணம், அனுராக் அல்ல. அவரின், அவர் குடும்பத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்.
மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

தன்னுடைய பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், சமூகத்தில் கருத்துகளை முன்வைக்க அவருக்கு எப்படி மனம் வரும்? ஒருவரின் பாதுகாப்பு என்பது அவர் குடும்பத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதுதான். தன் மகளுக்கும் தாய்க்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், 'தான் பாதுகாப்பாக இல்லையோ' என்கிற உணர்வு நிலைக்குத் தற்போது அனுராக் தள்ளப்பட்டிருக்கிறார். இனி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்தான் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவார். இதுதான் அவர் எடுத்த முடிவுக்கான உளவியல் காரணம். 'மிகப்பெரிய பிரபலம் இப்படிச் செய்யலாமா?' என்றால், மனித மனம், மனித உளவியல் எல்லோருக்கும் பொதுவானது. இதில் பிரபலம், பிரபலம் இல்லாதவர்கள் என்கிற விதியெல்லாம் கிடையாது.

மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

எனவே, அனுராக் எடுத்திருக்கும் இந்த முடிவுக்குச் சமூகம்தான் காரணம், அனுராக் அல்ல. அவரின், அவர் குடும்பத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்'' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

ஆம்! இதைத்தான் அனுராக்கும், 'மனதில் நினைப்பதை அச்ச உணர்வின்றி பேச அனுமதிக்கப்படாதபோது, பேசாமலே இருக்கப்போகிறேன்' என்று தெரிவித்திருக்கிறார். எனில், எந்தவித அச்சமுமின்றி அனுராக் பேசுவதற்கான சூழலைச் சமூகமும் அரசும்தான் ஏற்படுத்த வேண்டுமே இதில் அனுராக்கின் கையில் ஏதுமில்லை. அவரைக் குற்றம் சொல்வதிலும் நியாயமில்லை.

அடுத்த கட்டுரைக்கு