Published:Updated:

அவெஞ்சர்ஸ் இயக்குநர்களின் 'The Gray Man'-ல் தனுஷ்... படத்தின் கதை என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முன்னணி ஹாலிவுட் நடிகர்களுடன் இணையும் தனுஷ்!
முன்னணி ஹாலிவுட் நடிகர்களுடன் இணையும் தனுஷ்!

சில நாட்களுக்கு முன்தான் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ரையன் காஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டீ அர்மாஸ் ஆகிய பிரபல நடிகர்கள் நடிப்பார்கள் என அறிவித்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ்.

கடந்த ஆண்டு உலக அளவில் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்த திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்:எண்டு கேம்'. இந்த படத்தை இயக்கியவர் ஜோ ரூஸ்ஸோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ. மார்வெலின் முக்கிய பிளாக்பஸ்டர்களான 'கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ச்சர்', 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படங்களையும் இயக்கியது இந்த சகோதர்கள்தான். இவர்கள் அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸுக்காக 'The Gray Man' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளனர்.

ஜோ ரூஸ்ஸோ, அந்தோணி ரூஸ்ஸோ
ஜோ ரூஸ்ஸோ, அந்தோணி ரூஸ்ஸோ

இதே பெயரில் 2009-ல் வெளிவந்தது மார்க் கிரீனி என்ற எழுத்தாளரின் முதல் நாவல். இந்த நாவலை ஆக்ஷன் படமாக எடுக்க சில காலமாகவே ஆர்வம் காட்டி வருகின்றனர் ரூஸ்ஸோ சகோதரர்கள். இதற்காக சோனியுடன் கைகோர்த்து முதல்கட்ட வேலைகளை பார்த்துவந்தனர். சில மாதங்களுக்கு முன்பு சோனி விலகிக்கொள்ள நெட்ஃப்ளிக்ஸ் இந்த ப்ராஜெக்ட்டை கையில் எடுத்தது.

அமெரிக்க உளவு அமைப்பான CIA-வில் பணிபுரிந்த முன்னாள் ஏஜென்ட் கெண்ட்ரி. இப்போது பணத்திற்காக பக்காவாக திட்டம் போட்டு பெரும் புள்ளிகளை தூக்கும் அசாசின். இவர்தான் இந்த கதையின் ஹீரோ. ஸ்கெட்ச் போட்டு தூக்குவதில் கில்லாடியான இவரை கொல்ல வேண்டிய மிஷனில் இருக்கிறார் மற்றுமொரு முன்னாள் CIA லாய்ட் ஹென்சன். யார் வலையில் யார் சிக்கினார்கள் என்பதுதான் கதை. நெட்ஃப்ளிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் பொருட்செலவில் ஆக்ஷன் திரில்லராக தயாராகவுள்ளது இந்த படம். பல பாகங்கள் கொண்ட தொடராக இது அமையும்.

 ரையன் காஸ்லிங்
ரையன் காஸ்லிங்

சில நாட்களுக்கு முன்தான் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ரையன் காஸ்லிங் (கெண்ட்ரி), கிறிஸ் எவன்ஸ் (லாய்டு), அனா டீ அர்மாஸ் ஆகிய பிரபல நடிகர்கள் நடிப்பார்கள் என அறிவித்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ்.

தற்போது இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணையவுள்ளது என அறிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இதன்படி முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இந்த படத்தில் இணைகிறார் நம்ம தனுஷ். எந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பார், எந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமென்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இவர்களுடன் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் நடித்த ஜெசிகா ஹென்விக், நார்கோஸ் தொடரில் நடித்த வேக்னர் மௌரா மற்றும் 'Once Upon a Time in Hollywood' படத்தில் கலக்கிய குழந்தை நட்சத்திரமான ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் இணையவுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு