RASI PALAN 2019 IN TAMIL - கடகம்

3ஜூலை2019

அதிகாரத்துக்கு அடிபணியாதவர்களே!

செவ்வாய், புதன், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். புது வேலை கிடைக்கும். பணிகளை முடிப்பதில் இருந்த போராட்டங்கள் விலகி, உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கி, அமைதி நிலவும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். மகளின் திருமணத்தை விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

மேஷம்

வருடம் முழுவதும் சனியும் கேதுவும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால், செல்வாக்கு உயரும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வருமானம் உயரும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.