மீனம்: 2-ல் சூரியன்; 2,3-ல் சுக்கிரன்; 5-ல் ராகு; 8-ல் குரு(வ); 10-ல் சனி; 10,11-ல் செவ்வாய்; 11-ல் கேது; 1,2-ல் புதன்
சுக்கிரன், செவ்வாய், கேது, மே 2 முதல் புதன்
மீனராசி அன்பர்களே! சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் மாதம் முழுவதும், மே 2 முதல் புதனும் அனுகூலமான பலன்களைத் தரவிருக்கிறார்கள்.பொருளாதார வளம் கூடும். உடல்நலம் மேம்படும். சிலருக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் மறைந்து, செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் ஏற்படும். பகைவர்களால் இருந்து வந்த இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பழுதான பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். ஆனால், குரு 8-ல் மறைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூடுமானவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, வலிய வந்து மன்னிப்புக் கேட்பார்கள். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். ஆனால், போட்டியாளர்களால் இடையூறு வரலாம். கணக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி, செல்வாக்கு அதிகரிக்கும். வீண் மனக்கவலை மறையும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் ஆதாயம் பெறலாம்.
மாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: ஏப்ரல் 14, 15, 17, 20, 23, 25, 28, மே 2, 4, 6, 8, 9, 10, 15
அதிர்ஷ்ட எண்கள்: 6, 7
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 29, 30, மே 1
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, தொல்லைகள் குறையும்.