மாத ராசிபலன்

15மார்ச்2023

பங்குனி மாத ராசிபலன் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13... மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

பொறுமையுடன் இருக்கவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாத முற்பகுதியில் சகோதரர்களால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மாத முற்பகுதியில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சற்று பொறுமையுடன் கையாளவேண்டியது அவசியம். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 18,20,22,26,29,31, ஏப்: 2,4,7,13

சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 15 காலை வரை; ஏப் 9, 10, 11 முற்பகல் வரை

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.