இன்றைய ராசிபலன்

20ஜனவரி2022

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஜனவரி - 20-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சிவவழிபாடு சிரமம் தவிர்க்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.