இன்றைய ராசிபலன்

8பிப்ரவரி2023

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் பிப்ரவரி 8 - ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். வணிகப்போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றிபெறுவீர்கள். சிவபெருமானை வழிபடு வது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.