இன்றைய ராசிபலன்

26செப்டம்பர்2021

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் செப்டம்பர் 26-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். இன்று நீங்கள் பைரவரை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.