இன்றைய ராசிபலன்

3டிசம்பர்2021

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் டிசம்பர் - 3 -ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். பிற்பகலுக்கு மேல் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தந்தை வழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.