இன்றைய ராசிபலன்

31மார்ச்2023

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் மார்ச் 31-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன்  உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.