RASI PALAN 2019 IN TAMIL - ரிஷபம்

3ஜூலை2019

எல்லோரையும் அன்புடன் நேசிப்பவர்களே!

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் சுக்கிரன் 10-ம் வீட்டில் வலிமையாக அமர்ந்திருப்பதால், அமைதியாக இருந்து சாதிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தடைப்பட்டு நிற்கும் காரியங்களெல்லாம் கைகூடும். பழைய கடன் தீரும். வருமானம் உயரும். உங்கள் ராசிக்கு மூன்றாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். தைரியம் பிறக்கும்.

மேஷம்

புதன் லாப வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஆண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். பெரிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். வருடம் முழுவதும் சனியும் அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் ஒருவித படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.