மிதுனம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

பழகியவர்களிடம் மனம்விட்டு பேசுகிற மிதுன ராசி அன்பர்கலே... ஒரு போதும் மதியாதார் வாசலை மிதிக்கமாட்டீர்கள். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்ட உங்களின் ராசிக்கு இதுவரை 7 ம் வீட்டில் அமர்ந்து பலன் தந்துகொண்டிருந்த சனிபகவான் இப்போது 8 ம் வீட்டில் சென்று அமர்கிறார். வழக்கமாக அஷ்டமத்து சனி என்றால் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமே தவிர பயம் கொள்ளத் தேவையில்லை. காரணம் சனிபகவான் மிதுன ராசியின் நட்புகிரகம் என்பதால் பெரும் துன்பங்கள் ஏற்படாதவாறு சனிபகவான் உங்களைக் காத்தருள்வார்.

இதுவரை சின்னச் சின்ன தடைகளையும், அவ்வப்போது உடல் நலக்குறைகளையும் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த கொண்டிருந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8 - ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது.

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனிப்பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப்பாருங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது.

நேரம் தவறி சாப்பிட வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதம் சில சமயங்களில் கோபத்தின் உச்சிக்கே கொண்டு போகும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

வர வேண்டிய பூர்விகச் சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணி, நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப்பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மருத்துவக் காப்பீட்டைப் புதுபித்துக்கொள்ளுங்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 9 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் விலகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்:

சனிபகவான் இருக்கும் இடத்தைப்போலவே அவரின் பார்வை படும் வீடுகளுக்கும் பலன்கள் உண்டு. அவ்வாறு உங்களின் 2,5,10 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்கிறார். சனிபகவான் அஷ்டமத்தில் அமர்ந்தாலும் அவரின் பார்வையால் நன்மைகள் நடைபெறும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த அடிப்படையில்,

உங்கள் ராசிக்கு 2 - ம் வீடான வாக்குஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும்.

சனிபகவான் 10 - ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

11.05.2021 முதல் 26.09.2021 வரை இந்தக் காலகட்டத்தில் சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பணம் வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள்.

இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் மற்றும் வீண் செலவுகள் வந்து நீங்கும். 28.12.2021 முதல் 26.1.2023 வரை உங்களின் தனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். உங்களிடம் பணம் பெற்று ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.

இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நிதானமாகப் பேசுங்கள். உங்களின் ரோக - லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் நிலம் வாங்கும் யோகம் உண்டு. என்றாலும் ரத்த சோகை, ரத்த அழுத்தம் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. மூத்த சகோதரருடன் மோத வேண்டாம்.

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நெடுநாள்களுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

மிதுன ராசிப்பெண்களுக்குரிய சனிப்பெயர்ச்சி பலன்கள் :

முன் உதாரணமாக வாழும் மிதுன ராசிப்பெண்களே... இதுவரை உங்களின் ராசிக்கு 7 ம் வீட்டில் இருந்து கொண்டு அடுக்கடுக்காக தோல்விகளையும், நட்டங்களையும், தனிமையையும் தந்த சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் அஷ்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார்.

அஷ்டமத்துச் சனி ஆரம்பமாகிறதே... இனி தினந்தோறும் அவஸ்தை தான். அகப்பட்டவனுக்கு அட்டமத்துச் சனி என்பார்களே... இனி வீண் பழி எல்லாம் வருமே என்றெல்லாம் கலங்காதீர்கள். ஏனென்றால் சனிபகவான் ஆட்சிப் பலம் பெற்று அமர்வதால் நல்லதே நடக்கும். இதுவரை 7 - ல் நின்ற சனி எந்தச் செயலையும் முழுமையாக முடிக்க முடியாமல் தடுத்தார். திறமையிருந்தும் தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளப்பட்டீர்களே... குடும்பத்திற்குள் எவ்வளவோ சிக்கனமாக இருந்தும் எதுவும் சேமிக்க முடியவில்லையே... மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பைப் பிரச்சனை என அடிக்கடி தொந்தரவுகள் இருந்ததே... இனி ஆரோக்கியம் கூடும். கணவர் எதற்கெடுத்தாலும் குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருந்தாரே! இனிப் புரிந்து நடந்து கொள்வார்கள். குடும்ப வருமானம் உயரும். கைமாற்றாக வாங்கி இருந்ததைத் தந்து முடிப்பீர்கள். அநாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். முன்பிருந்ததை விட கணவரின் ஆரோக்கியம் கூடும். உங்கள் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வார். பெற்றோரின் உடல்நலமும் சற்று முன்னேற்றம் தரும். என்றாலும் எல்லா விஷயத்தையும் கவனமாகக் கையாளுங்கள். இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சனிபகவான் உங்கள் ராசிக்கு 2 - ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவப்படாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5 ம் வீட்டையும் 10 வீட்டையும் பார்ப்பதால் பார்ப்பதால் மனதில் அச்சவுணர்வு அதிகரித்தாலும் அதுவே முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தூண்டும்.

பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்வீக சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனிபகவான் 10&ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரம் செய்யும் மிதுன ராசிப் பெண்களே! பணவசதி இல்லாததால் விரிவுபடுத்த முடியாமல் தடுமாறிய நிலை மாறும். இனி இந்த நிலைமாறும். பண உதவியும் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாள்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். பிரச்னைகளை வந்தாலும் சாதகமாக எடுத்துச் சொல்லுங்கள்.

வேலைக்குச் செல்லும் மீனராசிப் பெண்களே! மற்றவர்களின் வேலையைச் சேர்த்து பார்த்தும் கெட்ட பெயர்தானே கிடைத்தது! உங்களை விட வயதில், தகுதியில் குறைவானவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைத்ததே! இனி அந்த நிலை மாறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உடனே கிட்டும். கலைத்துறைப் பெண்களே... சோகத்திலிருந்து விடுபடுவீர்கள். அலுவலகத்தில் பேச்சில் மட்டும் கவனம் தேவை. ஆர்வக்கோளாறாகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய

இந்தச் சனிப் பெயர்ச்சி உங்களைத் தனித்து நின்றே வெற்றி பெற வைக்கும் சக்தியையும், சகிப்புத் தன்மையையும், பணப் புழக்கத்தையும் தருவதாக அமையும்.

மிதுனராசி வியாபாரிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

7 ம் இடத்தில் இருந்த சனிபகவானால் தாராளமாக முதலீடு செய்து, விசாலமாகக் கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். இப்போது 8 ல் குடிவருகிறார். இனியாவது ஆழம் தெரிந்து கால் வையுங்கள். வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வேலையாள்களால் ரகசியங்கள் கசியக் கூடும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். என்றாலும் பொறுமையும் திட்டமிடலும் உங்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வெற்றியைத் தேடித்தரும்.

மிதுனராசி உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

உத்யோகஸ்தர்களே, நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காகப் பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் செலவுகளிலும், பிரச்சனைகளிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.

பரிகாரம்:

கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.