வார ராசிபலன்

29நவம்பர்2021

இந்த வார ராசிபலன்: நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை... மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், வாரத் தொடக்கத்தில் மனதில் தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாது. மூத்த சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், அனுசரித்துச் செல்லவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அவருடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். பழைய கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள். சக வியாபாரிகள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தரு வார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் மனதில் சோர்வு உண்டாகும். வாரப் பிற்பகுதியில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 30, டிச 1

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர் 2 இரவு முதல் 3, 4, 5 காலை வரை

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை