சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

``என்ன விசேஷம்... பக்கத்து வீட்டுக்கு ஸ்வீட் கொடுத்துட்டு வர்ற!”

“விசேஷமெல்லாம் இல்லை... ஸ்வீட் நல்லா வரலை...அதான்!”

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 2

``சார், உங்க பேங்க்ல சினி லோன் செக் ஷன் ஆரம்பிச்சிருக்கீங்களே... படம் எடுக்க லோன் தருவீங்களா?’’

``தியேட்டர்ல போய் படம் பார்க்க லோன் தருவோம்.’’

- செந்தில் சி.பி

ஜோக்ஸ் - 2

``நம்ம ஏரியா திருடன், இப்ப யார் வீட்லயோ திருடிக்கிட்டிருக்கான்னு எப்படிச் சொல்றே..?”

“ஃபேஸ்புக்ல, ‘ஃபீலிங் கில்டி’னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கானே..?”

-பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

``ஏன் மன்னா ஓடி வரும் போதுகூட செல்ஃபி எடுக்கிறீர்?’’

``செல்ஃபி இல்லை அமைச்சரே... பின்னால் யாரேனும் துரத்துகிறார்களான்னு பார்க்கிறேன்!’’

- கி.ரவிக்குமார்