
News
ஓவியங்கள்: கண்ணா

“எங்கள் ஆட்சியில்தான், ‘அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முதல்வராகும்’ திட்டம் கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!”
- கி.ரவிக்குமார்

“கடையில் ஏதோ, வெடிச்சது போல இருந்ததே?”
“நீங்க பட்டாசு விலையை சொன்னதும், இவர் நெஞ்சுதான் வெடிச்சது!”
- கி.ரவிக்குமார்

“உங்களுக்குப் போட்டிருக்கிற தையலையே பார்த்துக்கிட்டிருக்கீங்களே...ஏன்?”
“டாக்டர்தான், ‘தையல் பிரியாமப் பார்த்துக்க’ன்னு சொன்னார்!”
- மு.நந்தனா

“அந்த ரியல் எஸ்டேட்காரருக்கு தொழில் பக்தி ஜாஸ்தியா?!”
“ஆமாம்...ஆள்காட்டி விரலை, ‘சைட்’ காட்டி விரல்னு தான் சொல்லுவாராம்!”
- பி.ஜி.பி.இசக்கி