
News
ஓவியங்கள்: கண்ணா

“நீங்க குண்டானதுக்கு உங்க மனைவிதான் காரணமா...எப்படி?”
“தினமும் ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்குப் போகும்போது, ஊதுங்க ஊதுங்கன்னு நச்சரிப்பா!’’
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொய் எழுத வசதியாக 101, 201, 501 போன்ற ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவோம் என்பதை...’’
- அ.ரியாஸ்

``எதுவுமே சாப்பிட பிடிக்கல டாக்டர்!’’
``நம்ம ஹாஸ்பிட்டல் கேன்டீன்ல ட்ரை பண்ணி பாருங்களேன்!’’
- அ.ரியாஸ்

``தலைவர் ஏன் ஃபேஸ்புக்ல சுயசரிதையை எழுதறார்?’’
``யாரும் கிழிக்க முடியாது பாரு!’’
- ஜியா