ஓவியங்கள்: கண்ணா

''அந்தக் கட்சி செய்த ஊழலைப் பார்த்து, தலைவர் பிரமிச்சுட்டார்!''
''அப்புறம்..?''
''கூட்டணி அவங்களோடதான்னு முடிவுபண்ணிட்டார்!''
- அ.ரியாஸ்

'அங்கே கூட்டணிக்கு அழைக்காமல் எல்லா கட்சித் தலைவர்களும் நோகடிக்கிறார்கள்; இங்கே கூட்டத்துக்கு வராமல் மக்களாகிய நீங்கள் நோகடிக்கிறீர்கள். பாவம், எங்கள் தலைவர் என்னதான் செய்வார்?'
- கே.லக்ஷ்மணன்

'ஓட்டு வாங்க தொகுதிக்குப் போய் பேசித்தான் ஆகணும் தலைவரே!'
'தொகுதிக்குப் போனா ஓட்டுவாங்களேய்யா!''
- கிணத்துக்கடவு ரவி

''சும்மா இருக்காமல் தேர்தல் வரைவு அறிக்கை என ஒன்றை வெளியிட்டு, ஜோக் எழுதத் தெரியாதவனையும் எழுதவைத்த தலைவர் அவர்களே..!'
- வி.சகிதாமுருகன்.