சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

''வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாதவர்கள் நாங்கள்!'' 

''அப்படியே 'டெபாசிட் பற்றியும்’னு சேர்த்துக்குங்க தலைவரே!''

- கே.ஆனந்தன்

ஜோக்ஸ் - 2

''ஜனங்க ரொம்ப மோசம்யா!'

'ஏன் தலைவரே..?'

'கருத்துகணிப்புல நமக்கு ஆதரவுனு சொல்லக்கூட பணம் கேட்கிறாங்களே!'

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

''முதல் நாள்... முதல் கையெழுத்து!''

'''கண்டிஷன் பெய்ல்’ கையெழுத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையா தலைவரே?''

- ச.ஜான் பிரிட்டோ 

ஜோக்ஸ் - 2

'அலைகடல் என...  பெருந்திரள் எனக் கூடியிருக்கும் மக்களே..!'

'எங்கே... எங்கே... எங்கே தலைவரே?'

- கே.லக்ஷ்மணன்