சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

''ஜெயம் ரவிக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!'' 

''என்ன... தலைவர் உளர்றார்?''

''உளரல, ஜெயம் ரவிதானே 'தனி ஒருவன்’?''

- புதுவண்டி ரவீந்திரன்

ஜோக்ஸ் - 3

''ஆட்சியில் இருந்தா தலைவர் ரெகுலரா கோட்டைக்குப் போவார்.''

''இல்லைன்னா?''

''ரெகுலரா கோர்ட்டுக்குப் போவார்!''

- கே.ஆனந்தன்

ஜோக்ஸ் - 3

''கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு எனக் கூப்பிட்டு, உங்கள் மகன் கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுப்பதில் இருந்து மாவிலை தோரணம் கட்டுவது வரை வேலைவாங்கிவிட்டு, தலைவருக்கு மூணு வேளை கல்யாணச் சாப்பாடு மட்டும் போட்டு அனுப்பியிருக்கிறீர்களே!''

- சி.சாமிநாதன்

ஜோக்ஸ் - 3

''வாட்ஸ்அப் அணி வரதன் அவர்களே... ஃபேஸ்புக் அணி பேச்சியப்பன் அவர்களே... ட்விட்டர் அணி துரை அவர்களே... மீம்ஸ் அணி மேகநாதன் அவர்களே..!''

- பர்வீன் யூனுஸ்