சினிமா
Published:Updated:

“அஜித் காதலுக்கு நான் உதவினேன்!”

க்ளிக்ஸ் வித் ஷாம்லிம.கா.செந்தில்குமார், கார்க்கிபவா, படங்கள்: அஜித்குமார்

அஜித் இப்போது... கிட்டத்தட்ட முழுநேர ஸ்டில் போட்டோகிராபர்! அவர் கேமராவின் இந்த வார க்ளிக்ஸ்... ஷாம்லி!

''லுக்ஸ் எங்கே இருக்கணும், காஸ்ட்யூம்ஸ் எப்படி இருக்கணும், ஓவர் மேக்கப் கூடாது, ஹேர் கலரிங், கர்லிங் தவிர்க்கணும்’னு ஒரு சின்ன பார்வை, சின்ன சிரிப்புக்குக்கூட அவ்வளவு டிரில் வாங்கினார். யெஸ்... போட்டோகிராபினு வந்துட்டா அஜித் டாஸ்க் மாஸ்டர்'' - 'அத்தான்’ அஜித் பற்றி பேசும்போது எல்லாம் ஷாம்லி குரலில் குழந்தைக் குதூகலம். இந்த முன்னாள் 'குழந்தை நட்சத்திரம்’ இப்போது சினிமா ஹீரோயின்! விக்ரம் பிரபுவுடன் 'வீர சிவாஜி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

''எங்கே போயிருந்தீங்க இத்தனை வருஷங்களா?''

''சர்ச் பார்க், டபிள்யூ.சி.சி-னு சென்னையையே சுத்திட்டு இருந்து போர் அடிச்சது. மாஸ்டர்ஸ் படிக்க சிங்கப்பூர் போயிட்டேன். சினிமா பத்தின மேனேஜ்மென்ட் கோர்ஸும் முடிச்சேன். எப்படியும் கொஞ்ச வருஷம் கழிச்சு, வீட்ல கல்யாணம் பண்ணிக்கச் சொல்வாங்க. அதுக்கு முன் படங்கள்ல நடிச்சுரலாம்னு வந்திருக்கேன். ''அரிமா நம்பி’ படத்துல விக்ரம் பிரபு நடிச்சது ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் என் ஸ்கூல் ஃப்ரெண்டோட அண்ணன். அதனால முன்னாடியே பழக்கம்தான். தமிழ்ல ரெண்டாவது படம் தனுஷ்கூட நடிக்கிறேன். சினிமா தவிர டான்ஸ் பிடிக்கும். நிறைய டான்ஸ் கத்துக்கணும்கிறது எதிர்கால ஆசை. அப்புறம் டிரம்ஸ் கத்துட்டு இருக்கேன்!''

“அஜித் காதலுக்கு நான் உதவினேன்!”
“அஜித் காதலுக்கு நான் உதவினேன்!”

''ஹீரோயினா அறிமுகமாகிறதுக்கு சினிமா சீனியரா அஜித், ஷாலினி என்ன டிப்ஸ் தந்தாங்க?''

''அப்படி எல்லாம் டிப்ஸ் கொடுக்கலை. ஆனா, 'நீ யோசி. உனக்கு எது சரினு படுதோ அதை மட்டும் பண்ணு’னு சொன்னார் அஜித்!''

''அக்கா ஷாலினியின் குழந்தைகள் அனோஷ்கா, ஆத்விக்... எப்படி இருக்காங்க?''

''அன்ஸு.... நான் அனோஷ்காவை அப்படித்தான் கூப்பிடுவேன். எட்டு வயசு ஆகப்போகுது. அக்கா, நான், அன்ஸு மூணு பேரும் நிறைய டிராவல் பண்ணுவோம். மூணு பேரும் ஃப்ரெண்டு மாதிரின்னே சொல்லலாம்.  வெளியே போறப்ப அன்ஸுவைச் செமத்தியா கலாய்ப்பேன். செல்லமா சீண்டி அழக்கூட வைப்பேன். அப்புறம் பொம்மை எல்லாம் வாங்கிக் கொடுத்து, கொஞ்சி சமாதானப்படுத்துவேன். அன்ஸு இப்பவே நிறைய விஷயங்கள் கத்துக்கிறா. பாட்மின்டன், பியானோ, பாட்டு, பரதநாட்டியம்னு பல ஏரியாவுல கில்லி. ஸ்கூல்யும் பிரைட் ஸ்டூடன்ட்.ஆத்விக் ஆறு மாச சுட்டி. என்னை எப்போ பார்த்தாலும் சிரிச்சுட்டே இருப்பார். அவர் அழுது நான் பார்த்ததே இல்லை. சமர்த்துப் பையன்!''

“அஜித் காதலுக்கு நான் உதவினேன்!”

''உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ, ஹீரோயின் யார் யார்?''

''ஹீரோயின்கள்ல அப்படி யாரும் கிடையாது. ஹீரோக்கள்ல பிடிச்சவர்னா ஒன் அண்ட் ஒன்லி ஷாரூக் கான். ரொம்பச் சின்ன வயசுல இருந்தே அவரை ரொம்பப் பிடிக்கும். அவரை நான் சந்திக்கவும் வாய்ப்பு கிடைச்சது. அதுக்குக் காரணம் அஜித்தான்!''

“அஜித் காதலுக்கு நான் உதவினேன்!”

''எப்படி?''

''அஜித்-ஷாலு காதலிச்சுட்டு இருந்த சமயம் அது. அக்கா கல்யாணத்துக்கு உடனடியா ஓ.கே சொல்லாம இருந்தா. அப்போ அஜித் என்கிட்ட, 'உங்க அக்காவை என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு’னு சொல்லிட்டே இருப்பார். நானும் அவங்க காதலுக்கு என்னால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகள் பண்ணேன். அப்போ, 'உங்க கல்யாணத்துக்கு நான் உதவி பண்ணா எனக்கு என்ன கிடைக்கும்’னு ஜாலியா கேட்பேன். 'எனிதிங்... யூ வான்ட்’னு சொன்னார். 'ஓ.கே ஷாரூக் கானைச் சந்திக்கணும்’னு சும்மா சொல்லியிருந்தேன். மறந்துட்டேன். கல்யாணமும் முடிஞ்சிருச்சு. 'அசோகா’ படத்துல நடிச்சுட்டு இருந்தப்ப திடீர்னு அஜித் என்னைக் கூப்பிட்டு ஷாரூக் முன்னாடி நிறுத்திட்டார். ஆச்சர்ய அதிர்ச்சி தாங்கலை. சொன்ன சொல்லைக் காப்பாத்துறதுல ஹி இஸ் த மேன்!''

''சூப்பர்... ஆமா, அஜித்-ஷாலினி காதலுக்கு உதவுனேன்னு சொன்னீங்களே... என்ன பண்ணீங்க?''

'' 'அமர்க்களம்’ ஷூட்டிங்லதானே  அவங்களுக்குள்ள ஒரு ஸ்பார்க் பத்திக்கிச்சு. 'ஷாலுவுக்கும் தன் மேல ஒரு பிரியம் இருக்கு. வீட்ல என்ன சொல்வாங்களோனு யோசிக்கிறாங்க’னு அஜித்துக்குத் தோணியிருக்கு. உடனே எங்க அம்மாகிட்டயே வந்து, 'ஆன்ட்டி... உங்க பொண்ணை என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க’னு சொல்லிட்டார். ஷாலுவுக்கு ஷாக். சினிமாவுலதானே ஹீரோக்கள் அப்படிப் பண்ணுவாங்க. ஷாலு எந்தப் பதிலும் சொல்லாம இருந்தப்ப அஜித் என்கிட்ட வந்து, 'உங்க அக்காகிட்ட எனக்காகப் பேசு’னு சொல்லிட்டே இருப்பார். நானும் சான்ஸ் கிடைக்கிறப்ப அஜித் பத்தி நல்லவிதமா பேசிட்டே இருந்தேன். 'அஜித் ரொம்ப கேரிங். என்னை எவ்ளோ பத்திரமா பார்த்துக்கிறார் தெரியுமா?’னு விவரம் தெரியாம பேசுற மாதிரி பேசிட்டே இருப்பேன். அதனால மட்டும் இல்ல... ஆனா, அதனாலயும் அக்கா ஓ.கே சொல்லிட்டா. இப்போ ஒவ்வொரு நாளும் நான் சொன்னதை அக்கா ஃபீல் பண்ணிட்டு இருக்கா. அந்த அளவுக்கு ஒரு 'குடும்பத் தலைவரா’ அஜித் அவளையும் குழந்தைகளையும் நல்லா பார்த்துக்கிறார்.

“அஜித் காதலுக்கு நான் உதவினேன்!”

சமையல்ல அவருக்கு அவ்வளவு ஆர்வம். 'பசிக்குது’னு சொல்லிட்டா போதும், 'என்ன வேணும்... இதுவா... அதுவா?’னு மெனு கேட்டுக்கிட்டு வெரைட்டி விருந்து வெச்சு அசத்துவார். பாஸ்தா, பிரியாணி, சிக்கன் கறினு அவர் பண்ணாத டிஷ் கிடையாது. 'அப்பா எனக்கு பிரேக்ஃபாஸ்ட்டுக்கு இது வேணும்’னு அன்ஸு சொல்லிட்டா போதும்... மறுநாள் சீக்கிரமே எழுந்து அவ கேட்டதைப் பண்ணிக் கொடுத்துருவார். குடும்பத்து மேல அக்கறை காட்டுறதுல அஜித்தை யாரும் பீட் பண்ணவே முடியாது!''