ஓவியங்கள்: கண்ணா

'போற இடத்துல எல்லாம் 'டிஜிட்டல் இந்தியா’னு பிரதமர் பெருமை அடிச்சுக்கிறாரே... அவரால 'ஆன்லைன் முன்ஜாமீன்’ ஸ்கீம் கொண்டுவர முடியுமாய்யா?''

' 'தலைவருக்கு 2016-ல் கண்டம்’னா ஜோசியர் சொன்னார்?''
'அப்படிச் சொல்லியிருந்தா பரவாயில்லையே... '2016-ன் தண்டம்’னுல சொல்லித் தொலைச்சிருக்கார்!''

''என்னப்பா... எப்பவும் பூட்டை உடைச்சு வீடு புகுந்து திருடுவே... இப்ப சைபர் கிரைம்ல பூந்துட்டே?''
''டிஜிட்டல் இந்தியா’னு நாடு வேகமாப்போகுது... நாமளும் அப்டேட் ஆகணும்ல சார்!''
-கிணத்துக்கடவு ரவி

''வருமான வரியை ஒழுங்கா கட்டினா ஜெயில்ல
'ஏ’ கிளாஸ் தருவாங்களாமே... உண்மையாவா?''
''முதல்ல வருமானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க தலைவரே. அப்புறமா ஜெயில்ல 'ஏ’ கிளாஸ் பற்றி யோசிக்கலாம்!''
- ச.ஜான் பிரிட்டோ