Published:Updated:

உலகின் அழகிய பேய்!

கார்க்கிபவா

'அரண்மனை-2’ க்காக மீண்டும் 'பேய்’ மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார் ஹன்சிகா. 'உலகத்துல இவ்ளோ அழகான பேயா?!’ என ரசிக்கவைக்கிறார். அதனாலேயே நடிக்கும் படங்களின் ரிசல்ட் ஹன்சிகாவைப் பாதிப்பதே இல்லை. 'பப்ளி செல்லம்’ என அவரைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறது கோலிவுட்!   

'' 'குட்டி குஷ்பு’னு ரசிகர்கள் கொஞ்சிட்டு இருந்தப்பவே சடார்னு ஒல்லி ஆகிட்டீங்க. பெர்சனலா உங்களுக்கு எந்த லுக் பிடிச்சிருக்கு?''

''ரெண்டுமே நான்தானே! அதனால ரெண்டுமே பிடிக்கும். ஆனா, நிறையப் பேர் 'இப்ப இருக்கிற ஸ்லிம் லுக்தான் சூப்பர்’னு சொன்னாங்க. பப்ளியா இருந்தா வெரைட்டி ரோல்ஸ் நடிப்பதிலும் சில பிரச்னைகள். அதனால ஸ்லிம்தான் இனி என் லுக்!''

''ஒரே சமயத்துல பெரிய நட்சத்திரங்கள், அறிமுக ஹீரோக்கள், ரெண்டு மூணு ஹீரோயின் சப்ஜெக்ட்னு கலந்துகட்டி நடிக்கிறீங்களே... என்னதான் உங்க கேம் பிளான்?''

''எனக்கு என் மேல் நம்பிக்கை அதிகம். அதான் கேம் பிளான். ரெண்டே ரெண்டு சீன் வந்தாலும்கூட ரசிகர்களை என்னால அட்ராக்ட் பண்ண முடியும்னு நம்புறேன். சிம்பிள்!''

''உங்ககூட நடிச்ச ஹீரோயின்ஸ்ல உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் யாரு?''

''அப்படி யாரும் இல்லை!''

உலகின் அழகிய பேய்!

'' 'நான் ஒரு கமல் ஃபேன்’னு சொல்லியிருந்தீங்க. சமீபத்துல அவரை நேர்ல சந்திச்சப்ப என்ன சொன்னார்?''

''சினிமா பத்திதான் நிறையப் பேசினோம். அப்புறம் பெர்சனல் விஷயங்கள் பேசினோம். அதெல்லாம்... ரகசியம்!''

'' 'அரண்மனை’யில பேயா நடிக்கிறீங்க. உங்களுக்கு பேய் பயம் உண்டா?''

''பேய்னு இல்லை... பேய் படங்கள்னாலே பயம். அதெல்லாம் பார்க்கவே மாட்டேன். ஆனா, நானே பேயா நடிக்கிறது எனக்கே ஆச்சர்யம்!''

''சமீபத்துல எந்தப் படம் பார்க்கணும்னு நினைச்சீங்க?''

'' 'காக்கா முட்டை’ பத்தி நிறையக் கேள்விப்பட்டேன். அது ரிலீஸானப்ப நான் வெளிநாட்டுல இருந்தேன். அந்தப் படம் பார்க்கணும். பசங்க ரெண்டு பேரும் கலக்கிட்டாங்களாமே!''

''ரோலக்ஸ் வாட்ச்ன்னா பிடிக்கும்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தீங்க. இதுவரை யாருக்கு அதைப் பரிசா கொடுத்திருக்கீங்க?''

''நைஸ் ஸ்பீக்கிங் வித் யூ. பை... பை..!''