ஓவியங்கள்: கண்ணா

''தலைவர் ஏன் உம்முனு இருக்கார்?''
''அவரோட வாழ்க்கை வரலாறை '10 செகண்ட் கதை’யா எழுதிட்டாங்களாம்!''
- வி.சகிதாமுருகன்

'தலைவர் என்ன சொன்னார்னு ஜட்ஜ் கோபமா எழுந்துபோறார்?''
''கண்டிஷன் பெயில் கொடுங்க... இல்லைனா ஏர் கண்டிஷன் ஜெயில் கொடுங்க’னு சொல்லியிருக்கார் மனுஷன்!'
- கிணத்துக்கடவு ரவி

''நம்ம மீட்டிங்குக்கு கூட்டம் சேர்க்க ஒரு ஐடியா சொல்லுய்யா!''
''நயன்தாராவைக் கூப்பிடலாமா தலைவரே?''
- எஸ்கா

''ஆனாலும், தலைவருக்கு ரொம்பத்தான் பேராசை. 'நம்ம கட்சி தேர்தல் விளம்பரத்துல கமல் நடிப்பாரா?’னு கேட்கிறது டூ மச்ல!''
- அம்பைதேவா