Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 3

''நம்ம தம்பி நடிச்ச புதுப்படத்தை எப்படியாவது ஓட்டிரணும்யா!' 

'ட்விட்டர் ஆளுங்ககிட்ட சொல்லிருவோம் தலைவரே, ஓட்டு ஓட்டுனு ஓட்டிருவாங்க!'

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 3

''தேர்தல் பிரசாரம் தொடங்கிடுச்சாமே... என்னை யாரும் பிரசாரத்துக்குக் கூப்பிடவே இல்லையேய்யா!''

''கட்சி வெளங்கினா மாதிரிதான். தலைவரே...

அது நடிகர் சங்கத் தேர்தல்.''

- கே.ஆனந்தன்

ஜோக்ஸ் - 3

''அது 'வெட்டியான் வீடு’னு எப்படிச் சொல்றீங்க?''

''பின்ன, வீட்டுக் கதவுல 'சாவு, சாவ விடு’னு எழுதியிருக்காரே!''

- வி.சாரதி  டேச்சு

ஜோக்ஸ் - 3

''தலைவரே, உங்களை வாட்ஸ்அப்ல வெளுத்து வாங்குறாங்கபோல!'

'லாக் அப்லயும் அதைத்தானேய்யா செஞ்சாங்க!'

- பர்வீன் யூனுஸ்