Published:Updated:

பிட்ஸ் பிரேக்

எம்.குணா, பா.ஜான்ஸன்

• மலையாளத்தில் 'பிரேமம்’ ஹிட்டானதைவிட சூப்பர் ஹிட், அந்தப் படத்தில் 'மலர்’ கதாபாத் திரத்தில் நடித்த சாய் பல்லவிதான்! படம் பார்த்தவர்கள் 'மலர்... மலர்...’ என உருக, 'நடிப்பைத் தொடர்வது பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை’ என ஃபேஸ்புக்கில் ஷாக் கொடுத்தார் சாய் பல்லவி. ரசிகர்கள் துவண்டுபோக, இப்போது சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் அவர். சமீர் தாஹிர் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடி சேரப்போவது மலர் டீச்சர்தான்.

பிட்ஸ் பிரேக்

பின்குறிப்பு... சாய் பல்லவி  ஏற்கெனவே 'தாம் தூம்’ படத்தில் கங்கணாவின் தோழியாக நடித்திருக்கிறார். கவனித்தீர்களா... நீங்கள் கவனித்தீர்களா?'

'அச்சம் என்பது மடமையடா’ பட டீஸர், சிம்பு பிறந்த நாளில் வெளியானது. அதே நேரத்தில் அதன் தெலுங்கு வெர்ஷன் 'சாஹசம் சுவாசகா சாகிபோ’ பட டீஸரும் வெளியானது. பிறகு, இரு படங்களைப் பற்றிய தகவல்களும் அப்படியே அடங்கிவிட, சமீபத்தில் நாக சைதன்யா பிறந்த நாளில் படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். ரொமான்டிக் ஆக்‌ஷன் காம்போவாக வரும் படத்தில், வில்லனாக பாடகர் பாபா சேஹலுடன் இணைந்து டேனியல் பாலாஜியும் நடித்திருக்கிறார். டீஸர்கள் மட்டும் வெளியாகி ஆர்வத்தைத் தூண்ட, படம் எப்போது வெளியாகும் என்பது மட்டும் இன்னும் சஸ்பென்ஸ். சொல்லிடுங்களேன் கௌதம்!

பிட்ஸ் பிரேக்

• வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே ஸ்பெஷல்தான். அதிலும் 'ஸ்பெக்டர்’, வெளியாவதற்கு முன்னரே ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டது. படத்தின் க்ளைமாக்ஸில் 'வெடித்துச் சிதறும் காட்சி’ ஒன்றுக்கு மிக பிரமாண்ட செட் ஒன்றைப் போட்டு வெடிக்கச் செய்திருக் கிறார்கள். பல ஆயிரம் டாலர் பணம், 68 டன் வேதிப்பொருள், 33 கிலோ வெடிப்பொருள், 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்... என பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சி படத்தில் வருவது7.5 விநாடிகளே. 'அதிகச் செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட வெடிப்புக் காட்சி’ என கின்னஸ் சாதனை சான்றிதழ் வாங்கியிருக்கிறது படக்குழு. நிஜமாவே தெறிக்கவிட்டுட்டாங்கப்பா!

பிட்ஸ் பிரேக்

• ஒரு பக்கம் 'சூப்பர் ஸ்டார்’ படத்துக்கு இசையமைப்பாளர், இன்னொரு பக்கம் அறிமுக இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசையில் 'ஜில் ஜங் ஜக்’ படத்தில் பாடகர்... என இரண்டு எக்ஸ்ட்ரீமிலும் இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இதற்கு இடையே வெளுத்துக்கட்டிய சென்னை மழையில், மனைவி மீனாக்‌ஷியுடன் ஜாலி சைக்கிள் ரெய்டு அடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டாரோட சேர்ந்தாலே இப்படித்தான் பாஸ்... சிம்ப்ளிசிட்டி!

பிட்ஸ் பிரேக்

• வில்லனாக நடிக்கும் காலத்திலேயே ஹீரோக்களைத் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுவார் சத்யராஜ். ஆனால், 'ஒரு நாள் இரவில்’  படத்தில் சத்யராஜை, பொறிக்குள் மாட்டிய எலியாக அல்லாடவைத்திருக்கிறார் அனுமோல். உருட்டும் விழிகள், உதட்டுச் சுழிப்பு, கரன்சி கறப்பதில் கறார் என பாலியல் தொழிலாளி வேடத்தில் அசத்தியிருக்கிறார். 'மலையாளத்துல 15 படங்களுக்கு மேல நடிச்சுட்டேன். தமிழில்  'கண்ணுக்குள்ளே’ படத்துல அறிமுகமாகி அஞ்சு படங்கள் நடிச்சேன். நல்ல கதையில் நடிக்கிறதுக்காக  நடிப்புக்கு சில காலம் ஹாலிடேவிட்டேன். என் காத்திருப்பு வீண்போகலை’ என எமோஷன் ஆகிறார் அனு... வாங்க மோளே... வாங்க!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

• 'ஏ ஜவானி ஹை திவானி’ படத்துக்குப் பிறகு தீபிகாவுடன் இணையும் படம்... 'ராக்ஸ்டார்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் இம்தியாஸ் அலியுடன் இணையும் படம்... என 'தமாஷா’ படம் இரண்டு விதங்களில் ரன்பீர் கபூருக்கு ஸ்பெஷல். முந்தைய இரண்டுமே பெரிய ஹிட். இப்போது இரண்டு வெற்றிக் கூட்டணியும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால், செம குஷியில் இருக்கிறார் ரன்பீர். பட புரொமோஷனுக்காக லோக்கல் ட்ரெயினில் எல்லாம் தீபிகா-ரன்பீர் ஜோடி போட்டுச் சுற்ற, வெறிகொண்ட ரசிகர்கள் துரத்த... எக்கச்சக்க பப்ளிசிட்டி. நீ நடத்து ராஜா!