Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

'முழுக்க முழுக்க சுடுகாட்டிலேயே படம் எடுத்திருக்காங்களாமே... படத்துக்கு என்ன பேரு வெச்சிருக்காங்க?'

 'எரிக்கவிடலாமா..?''

- சேலம் கே.ராஜபாலு

ஜோக்ஸ் - 1

''தலைவரோட தொல்லை தாங்கலை!''

''ஏன்... என்னாச்சு?''

''கார்ல 'டாக்டர்’ 'வக்கீல்’னு எழுதுற மாதிரி, அவர் கார்ல 'ரௌடி’னு எழுதணுமாம்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

''என்னோட உருவ பொம்மையை மட்டும் ஏன்யா எரிக்க மாட்டேங்கிறாங்க?''

''எரிச்சா, உங்களைத்தான் எரிக்கிறதுனு முடிவோட இருக்காங்க தலைவரே!''

- அஜித்

ஜோக்ஸ் - 1

''தலைவர் கோபமா இருக்காரே ஏன்?''

''தலைவரைப் பற்றின மீம்ஸுக்கு, அவரோட சம்சாரம் லைக் கொடுத்திருங்காங்களாம்!''

- வந்தவாசி குமார்