பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சேதுபதி - சினிமா விமர்சனம்

சேதுபதி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதுபதி - சினிமா விமர்சனம்

சேதுபதி - சினிமா விமர்சனம்

நேர்மையான கறார் போலீஸுக்கும், லோக்கல் டெரர் தாதாவுக்கும் இடையே நடக்கும் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டே `சேதுபதி'.

இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதியின் லிமிட்டுக்குள் ஒரு எஸ்.ஐ எரித்துக் கொல்லப்படுகிறார். இந்த கேஸைக் கையில் எடுக்கும் சேதுபதிக்கு, கட்டப் பஞ்சாயத்து புகழ் வேல ராமமூர்த்தி மீது சந்தேகம். விசாரணையின் முடிவு என்ன, அந்தக் கொலை எதற்காக நடந்தது, தாதாவின் பழிவாங்கலில் சேதுபதிக்கு என்ன ஆனது என நீளும் கோடம்பாக்கக் காக்கிக் கதை!

கலகல விஜய் சேதுபதி, காக்கிச்சட்டையில் கர்ஜிப்பது புதுசு; முதல்முறையாக பக்கா குடும்பஸ்தன் ரோலில்... சூப்பர்ஜி சூப்பர்ஜி. கொஞ்சுவதிலும் கெஞ்சவைப்பதிலும் ரசிக்கவைக்கிறார் ரம்யா நம்பீசன். `பீட்சா’ ஜோடியின் கெமிஸ்ட்ரி இதிலும் வொர்க்அவுட் ஆகிறது. அது ஏங்க, கிச்சன்ல மட்டுமே ரொமான்ஸ் பண்றீங்க? பழக்கமான ரோல் என்றாலும் பக்கா மாஸ் காட்டுகிறார் வில்லன் வேல ராமமூர்த்தி.

சேதுபதி - சினிமா விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் திருநெல் வேலியில் ஆள்மாறாட்டம் காரணமாக நடந்த உதவி ஆய்வாளர் கொலை வழக்கு, சென்னை நீலாங்கரையில் திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட சிறுவனின் தொண்டைக்குள் சுட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் கதை என, இரண்டு உண்மைச் சம்பவங்களைக் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற மென்மையான படத்துக்கு அங்கீகாரம் கிடைக்காத கோபத்தில் `சேதுபதி’யில் லத்தியை கையில் எடுத்துச் சுழற்றியிருக்கிறார்.

`அடுத்து இதுதான்...’ என யூகிக்க முடிகிற திரைக்கதை பெரிய மைனஸ். நேர்மையான போலீஸ். ஆனால், பள்ளி மாணவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டுவது, இஷ்டப்படி சுட்டுத்தள்ளுவது என விஜய் சேதுபதியின் கேரக்டரில் அவ்வளவு குழப்பம். ஊரே பயப்படும் தாதாவைக் கைதுசெய்து

சேதுபதி - சினிமா விமர்சனம்

கடுப்பேற்றும் இன்ஸ்பெக்டர், தன் வீட்டுக்கு எந்தப் பாதுகாப்பும் செய்யாமல் இருப்பாரா? 10 வயது மகனுக்கு துப்பாக்கி சுடச் சொல்லித்தரும் விஜய் சேதுபதி, அந்தப் பயிற்சியை ஏன் தன் மனைவிக்குத் தரவில்லை என படம் முழுக்க பல லாஜிக் ஓட்டைகள்.

திரைக்கதையில் குறையும் வேகத்தை முடிந்த அளவுக்குக் கூட்ட முயற்சிசெய்கிறது தினேஷ் கிருஷ்ணனின் கேமரா. நிவாஸ் கே பிரசன்னா இசையில் ‘ஹவ்வா ஹவ்வா’ பாடல் மட்டும் ரிலாக்ஸ்.
துப்பாக்கி வைத்துக்கொண்டு சுடாமல், குறிபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

- விகடன் விமர்சனக் குழு