பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

``தலைவா... உங்களுக்கு ஓட்டு போடுறவங்களையும் கெடுத்துடுவீங்க போலிருக்கே...’’

ஜோக்ஸ் - 1

``எப்படிய்யா சொல்ற?’’

`` `நல்லா சிந்திச்சு ஓட்டு போடுங்க’னு சொல்றீங்களே!”

- தீ.அசோகன்

``20 வருஷத்துங்களுக்கு முன்னாடி பிறந்த உன் பையனுக்குப் பேர் வெச்சேனே... அவன் இப்போ எப்படி இருக்கான்?’’

ஜோக்ஸ் - 1

``உருப்படாம தறுதலையா ஊரைச் சுத்திக்கிட்டு, உங்க கட்சியிலதான் இருக்கான் தலைவரே...’’

- கள்ளக்குடி சரவணன்

``கூட்டணி பேசப்போன தலைவர், ஏன் கோபமாத் திரும்பிவர்றார்?’’

ஜோக்ஸ் - 1

``உட்காரக்கூட ஸீட் தரலையாம்!’’

- கி.ரவிக்குமார்

``எதிர்க்கட்சித் தலைவரோட கொடும்பாவியை எரிச்சதுக்கா உன்னைக் கட்சியில் இருந்து நீக்கினாங்க?’’

ஜோக்ஸ் - 1

``பழக்கத் தோஷத்துல கொடும்பாவி மீது ஃபுல்லா நம்ம கட்சி ஸ்டிக்கரை ஒட்டிட்டேன்!"

- கே.ஆர்.உதயகுமார்