
ஓவியங்கள்: கண்ணா
``தலைவர், எந்தத் தைரியத்துல போனதடவை நின்னு ஜெயிச்ச அதே தொகுதியிலேயே நிக்கிறாரு?’’

``ஜனங்க அவரோட முகத்தை மறந்துபோயிருப்பாங்கங்கிற தைரியத்துலதான்!’’
- வி.சாரதி டேச்சு.
``என்றைக்கு கூட்டணியில் சேர்கிறோமோ, அன்றையில் இருந்து எலெக்ஷன் முடிவுகள் வரும் நாள் வரை, எங்களுக்கு எந்தக் கட்சி மூன்று வேளைகளும் பிரியாணி போடுகிறார்களோ, அந்தக் கட்சியுடன்தான் கூட்டணிவைப்போம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்...’’

- வாணியம்பாடி ராஜ்குமார்
``சி.பி.ஐ கைதுபண்ண வந்தப்போ, தலைவர் அவங்ககிட்ட என்ன கேட்டாராம்?’’

`` `ஏதாவது ஆஃபர் இருக்கா?’னு கேட்டிருக்கார்!’’
- யுவகிருஷ்ணா
``இப்ப வெளிவந்த படத்தோட கதை உன்னோடதுனு கோர்ட்ல கேஸ் போட்டியே... என்னாச்சு?’’

`` `இந்தக் கேவலமான கதை உன்னோடதுதான்’னு சொல்லி, ஜட்ஜ் கண்டபடி என்னைத் திட்டி அனுப்பிட்டார்!’’
- சி.சந்தோஷ்குமார்