
ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா
‘‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?’’

‘‘இதை வெச்சே ரொம்ப ஓட்டிட்டாங்க எசமான்!’’
- அம்பைதேவா
‘‘தலைவர் ஏன் ரொம்ப சோகமா இருக்கார்?’’

‘‘அவருக்கு ‘சங்கு’ சின்னத்தை ஒதுக்கிட்டாங்களாம்!’’
- சி.சந்தோஷ்குமார்
‘‘அந்தப் `பஞ்சபாண்டவர் கூட்டணியில் சேர வேண்டாம்'னு சொல்றியே ஏன்யா?’’

‘‘தேர்தலுக்குப் பிறகு நமக்கு ‘வனவாசம்’தான் தலைவரே!’’
- கே.சி.கோவிந்தராஜன்
‘‘நீங்க அந்தக் கட்சித் தலைவர்கிட்ட ரெண்டு பெட்டி வாங்கிட்டதா பேசிக்கிறாங்களே தலைவரே!’’

‘‘விடுய்யா, அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!’’
- எஸ்.முகம்மது யூசுப்
‘‘தமிழில் பேசுவதற்கே சப் டைட்டில் போடவைக்கும் எங்கள் தானைத் தலைவனே!’’

- பாப்பனப்பட்டு வ.முருகன்
``எனது ஃபேஸ்புக் பேரன்புடையோரே... ட்விட்டர் ஃபாலோயர்களே... வாட்ஸ்அப் குழு வாலிபர்களே!’’

‘‘மீட்டிங் கேட்க யாரும் வரலைங்கிறதை தலைவர் எப்படிச் சமாளிக்கிறார் பாரு!’’
- அம்பைதேவா
‘‘நான் ஆளும் கட்சியைப் பார்த்துக் கேட்கிறேன்...’’

‘‘கேக்கிறதுனு ஆகிப்போச்சு, கொஞ்சம் கூடுதலா அமெளன்ட் கேளுங்க தலைவரே!’’
- பாப்பனப்பட்டு வ.முருகன்
‘‘ஏதோ சொல்ல வர்றே...
தைரியமா சொல்!’’

‘‘போலீஸால் நான்... போலீஸுக்காகத்தான் நான் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் எசமான்!’’
- எஸ்.ராமன்
ஓவியங்கள்: ஸ்யாம்
``தேர்தல் கமிஷன் மட்டும் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால், 100 சதவிகிதம் என்ன...

110 சதவிகித ஓட்டுப்பதிவுகூட செய்வோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’’
- எஸ்.எம்.இனியன்
“தலைவர் என்ன சொல்றாரு?”

“ `தேர்தல் செலவுக்கு நிதி திரட்ட, நாமளும் நட்சத்திர கிரிக்கெட் ஆடுவோமா?’ங்கிறாரு.”
- எஸ்கா
‘‘நம்மகிட்டே மக்கள் என்னதான்யா எதிர்பார்க்கிறாங்க?’’

‘‘வாஷிங் மெஷினும் ஃப்ரிட்ஜும்தான் தலைவரே!’’
- ஆர்.சி.முத்துக்கண்ணு
``தலைவர் ஏன் கோபமா இருக்கார்?’’

`` ‘முன்னாள் வேட்பாளரே வருக வருக!'னு பேனர் வெச்சிருந்தாங்களாம்.’’
- இளசை விசாகன்
“போன மாதம் ஹாஃப், இந்த மாதம் குவார்ட்டர், அடுத்த மாதம் கட்டிங் என, தனக்குத்தானே ‘படிப்படியாக’ மதுவிலக்கை அமல்படுத்திக்கொண்டிருக்கும் தலைவர் அவர்களே..!”

- கே.லக்ஷ்மணன்.
“இந்த ஸ்டேஷன் ஞாபகமிருக்கா தலைவரே?”

“நான் திறந்துவெச்சதா?”
“திறந்து உங்களைவெச்சது!”
- சி.சாமிநாதன்
“மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும்விதமாக, இப்போது சைட் டிஷ் கடைகளை மூடவிருக்கிறோம் என்பதை...”

- கிணத்துக்கடவு ரவி
“என்னை ‘குலதெய்வமே’னு கூப்பிடுறது எல்லாம் சரிதான்யா... அதுக்காக, `குத்தவெச்சு கூழ் ஊத்தப்போறோம் வாங்க'னு கூப்பிடுறது எல்லாம் ரொம்ப ஓவர்!”

- பாப்பனப்பட்டு வ.முருகன்
ஓவியங்கள்: சுரேஷ்
“மீட்டிங்ல நான் படிச்ச நம்ம தேர்தல் அறிக்கையைப் பத்தி மக்கள் என்ன பேசிக்கிறாங்க?”

“ ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு'ன்னு!''
- பாப்பனப்பட்டு வ.முருகன்
‘‘தலைவரை `சகலகலா வல்லவர்'னு சொல்றியே... எப்படி?!''

“டாங்கோவும் ஆடுவாரு... டப்பாங்குத்தும் ஆடுவாரு!''
- பி.ஜி.பி. இசக்கி