
ஓவியங்கள்: சுரேஷ்

“வேற ஏதாவது சொல்லணுமா?”
“ஃபேஸ்புக்ல, உங்க புரொஃபைல் பிக்சர் நல்லாவே இல்லை எஜமான்.”
- ஜெ.கண்ணன்

“நமீதா அங்கம் வகிக்கும் கட்சிக்குத் தாவ நினைக்கும் தலைவர் அவர்களே..!”
- சிவகுமார் நடராஜன்

“குருவே, தங்களின் தவவாழ்க்கை பயன் அளிக்கவில்லையே!”
“ஏன் அப்படிச் சொல்கிறாய் சிடனே?”
“தவவாழ்க்கை வாழும் தலைவரோட சொத்து, 118 கோடியாமே!''
- கே.அருணாசலம்

``அரசியல்வாதி வீட்டுக் கல்யாணம்கிறதை கரெக்ட்டா நிரூபிச்சுட்டாங்க!’
``எப்படிச் சொல்றே?''
``முகூர்த்த நேரத்துல மாப்பிள்ளையை மாத்திட்டாங்களே!’’
-ஜி.சுந்தரராஜன்
ஓவியங்கள்: கண்ணா


``தலைவரின் கடந்த 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற ஒருவர்கூட தோல்வி அடைந்தது கிடையாது என்பதை இந்த நேரத்திலே...’’
- க.சரவணகுமார்

`` `தலைவர்தான் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்’னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?’’
``பழக்கதோஷத்துல ரூபாய் நோட்டுல ஸ்டிக்கர் ஒட்டிட்டாராம்!”
- அபிசேக் மியாவ்

``தலைவா, நீங்க ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க?’’
``போன முறை மக்களுக்குச் செய்தேன், இந்த முறை பேரப்பசங்களுக்குச் செய்யப்போறேன்.’’
- தீ.அசோகன்

``வேறு ஏதாவது சொல்லணுமா?’’
``நாக்கை துருத்தறது தப்பா யுவர் ஆனர்?’’
- அம்பைதேவா

‘`தலைவருடன் மேடையில் படிப்படியாக இடம்பிடித்துவிட்ட வேட்பாளர்களே..!”
- பர்வீன் யூனுஸ்

``நாங்கள் செய்வதைச் சொல்வோம்!''
``நாங்க, உங்களை வெச்சுசெய்வோம்!''
- அம்பைதேவா

“நம்ம கட்சிக்கு என்னய்யா குறைச்சல்?”
``தொண்டர்கள்தான் தலைவரே!”
- பாப்பனப்பட்டு வ.முருகன்

``கடைசி நேரத்துல, நம்ம தலைவர் தேர்தல்ல இருந்து விலகிட்டாரே ஏன்?''
‘`சொன்னாங்களாம்... செஞ்சுட்டாராம்!”
- அபிசேக் மியாவ்

``வரும் மே 19-ல்...’’
``நீங்க என்னைத் தேடுவீங்க, நான் உங்களைத் தேடுவேன் தலைவரே!’’
- அம்பைதேவா

“சொல்லாததையும் செய்வோம்!”
“நமீதாவை, கட்சியில சேர்த்ததைச் சொல்றீங்களா தலைவரே?”
- கே.லக்ஷ்மணன்

“கூட்டணி அமைப்பதற்காகப் பட்டப் பாட்டை, தலைவர் இப்போது 10 செகண்ட் கதையாகச் சொல்வார் என்பதை...”
- சேலம் எஸ்கா