Published:Updated:

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!
News
ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

பா.ஜான்ஸன்

ஹாலிவுட்டின் சமீபத்திய வரவுகள், இந்தத் தேவதைகள். சின்னச் சின்ன ரோல்களில் நடிக்கத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி இன்று `ஹிட்’ படங்களில் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள் அல்லது இவர்கள் இருக்கும் படம் அதிரிபுதிரி ஹிட் ஆகும்.

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

`ஸ்பைடர்மேனின் காதலி' எம்மா ஸ்டோனுக்கு மேடை நாடகம் என்றால்... சினிமாவுக்கும் மேல. ஒரிஜினல் பெயர், எமிலி ஜேன். நடிப்பு ஆர்வத்தில் ஒரு செமஸ்டரோடு கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, வாய்ப்பு தேடி ஹாலிவுட்டுக்குக் கிளம்பிவிட்டார். சேனல் ஒன்றில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அப்படியே சின்னச்சின்ன சீரியல்களில் நடித்தார். இயக்குநர் கிரேக் மோட்டோலாவின் கண்ணில்பட, கிடைத்தது `சூப்பர்பேட்' முதல்பட வாய்ப்பு. சிலபல படங்கள் கடந்ததும் அடித்தது ஜாக்பாட். `தி அமேஸிங் ஸ்பைடர்மேன்' 1 & 2 படங்களில் ஸ்பைடர்மேனோடு ரொமான்ஸ் பண்ணுகிற வாய்ப்பு. இப்போது எம்மாவின் ரேஞ்சே வேறு. `ரெவனென்ட்' இயக்குநர் அலஹேன்ட்ரோவின் முந்தைய படமான `பேர்டுமேன்' பார்த்தீர்களா... அதில் மைக்கேல் கீட்டனின் மகளாக அசத்தினார். `பேட்டில் ஆஃப் த செக்சஸ்' படத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வேடத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

`ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' படம் பார்த்தவர்களால், டகோடாவை எளிதில் மறக்க முடியாது. டெக்ஸாஸைச் சேர்ந்தவர் டகோடா மயி ஜான்சன். நடனத்தில் ஆர்வம். 12-வது வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்துவிட்டார். `கிரேஸி இன் அலபாமா' படத்தில் தன் நிஜ அம்மாவுக்கு மகளாக நடித்ததுதான், ஹாலிவுட்டில் ஆரம்பம். படிப்பை முடித்துவிட்டு ஜான்சன் நடிக்க வந்த முதல் படம் `தி சோஷியல் நெட்வொர்க்'. படம் ஹிட் அடித்தாலும் அதற்குப் பிறகு பெரிய ரோல்கள் வரவில்லை. பல படங்களில் சின்னச்சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு லீட் ரோல் கிடைத்தது, `டேட் அண்ட் சுவிட்ச்' படத்தில்தான். அதற்குப் பிறகு `நீடு ஃபார் ஸ்பீடு' படத்தில் ஜான்சனின் நடிப்பு பாராட்டப்பட்டது. `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே' அவருக்கு தனித்துவமான பளிச் அடையாளத்தைக் கொடுத்தது. இப்போது அதன்  அடுத்தடுத்த பாகங்களான `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் டார்க்கர்', `ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் ஃப்ரீட்' படங்களில் நடித்துவருகிறார்.

See Also:  

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

தனுஷின் ஹாலிவுட் என்ட்ரி `தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப்  தி ஃபகிர்' படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த அலெக் ஸாண்ட்ரா டட்டாரியோ. `ஆல் மை சில்ட்ரன்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு, `பெர்சி ஜேக்சன் & தி ஒலிம்பியன்ஸ்' படத்தில் லீட் ரோல் கிடைக்க, அதிகம் பேசப்பட்டார். சென்ற வருடம் வெளியான `சான் ஆண்ட்ரியாஸ்' படத்தில் ட்வைன் ஜான்சன் (ராக்) மகளாக நடித்தவர், தற்போது ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் `பேவாட்ச்' படத்தில் சுடச்சுட சூடுபறக்க நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

லண்டன் பொண்ணு லில்லி ஜேம்ஸ், பள்ளிப் படிப்பு முடிந்ததும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். `கெமிஸ்ட்ரி' என்ற குறும்படத்துக்குப் பிறகு வந்தது வார்னர் பிரதர்ஸில் இருந்து `ராத் ஆஃப் தி டைடன்ஸ்' பட வாய்ப்பு. அதன் பிறகு, சில தொலைக்காட்சித் தொடர்கள். 2015-ம் ஆண்டில் `சின்ரெல்லா'வாக நடித்து பலரையும் கவனிக்கவைத்தார். அந்தப் படத்திலேயே பாடகியாகவும் என்ட்ரி. பிபிசி-யில் ஒளிபரப்பான `வார் & பீஸ்' என்ற வரலாற்றுத் தொடரில் நடாஷா என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்தார். இந்த வருடம் `பிரைடு அண்ட் ப்ரிஜுடிஸ் அண்ட் ஸோம்பீஸ்' வெளியானது. தற்போது `தி கெய்சர்ஸ் லாஸ்ட் கிஸ்' மற்றும் `ஆன்ட்-மேன்' பட கதாசிரியர் எட்கர் ரைட் இயக்கும் `பேபி டிரைவர்' படங்களில் பிஸி.

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

எமிலியாவின் அப்பா, தியேட்டரில் சவுண்ட் இன்ஜினீயர். எமிலியாவுக்கு, மூன்று வயது இருக்கும்போது `ஷோ போட்' என்கிற மியூஸிக் ஷோவைப் பார்த்ததும் நடிப்பில் ஆசை வந்துவிட்டது. அப்பா, எமிலியாவை லண்டன் டிராமா சென்டரில் சேர்த்தார். சைஃபை சேனலின் `ட்ரையாசிஸ் அட்டாக்' என்கிற தொடரில் நடித்ததன் மூலம் `நாளைய லண்டன் நட்சத்திரம்' என, பத்திரிகைகள் புகழ்ந்தன. 2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற பிரபலமான சீரியல், எமிலியாவின் புகழை இன்னும் கூட்டியது. டெர்மினேட்டரின் சமீபத்திய பாகமான `டெர்மினேட்டர் ஜெனிசஸ்' படத்திலும் முக்கியமான ரோலில் நடித்தார். இப்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ள `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் டேனரிஸ் டார்கர்யன் கதாபாத்திரத்தில் மேடம் பிஸியோ பிஸி!

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

இவரது பெயருக்கே ஒரு ஹிஸ்டரி உண்டு. ஈவ் பிறந்தது ஜூலை 7-ம் தேதி காலை 7 மணிக்கு. எனவே `Seven'ல் இருக்கும் `eve'வைத் தூக்கி பெயருடன் இணைத்துவிட்டார்களாம். நடிக்கப்போவதை வீட்டில் தெரிவித்த ஹேவ்சனுக்கு, பெற்றோரிடம் இருந்து பயங்கர எதிர்ப்பு. இருந்தாலும் தனது சகோதரி ஜோர்தனுடன் `லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட்' என்ற குறும்படத்தில் நடித்தார். `தி 27 கிளப்' படத்தில் நடித்த பிறகு `திஸ் மஸ்ட் பி த ப்ளேஸ்', `ப்ளட் டைஸ்', `எனஃப் செட்' படங்களில் சின்னச்சின்ன ரோல்களில் நடித்தார். சமீபத்தில் நடித்தது, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் `ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' படத்தில். டாம் ஹாங்ஸ் மகள் வேடத்தில் அசத்தியிருந்தார் ஈவ்.

ஹாலிவுட் ஏஞ்சல்ஸ்!

கிரிஸ்டன் ஸ்டூவர்டுக்கு சொந்த ஊர் கலிஃபோர்னியா. இவருடைய அப்பா ஃபாக்ஸ் சேனலில் புரொடியூசர். அம்மா, ஸ்கிரிப்ட் மேற்பார்வையாளர் மற்றும் இயக்குநர். குடும்பமே சினிமாவுக்கு மிகவும் நெருக்கமான குடும்பம் என்பதால், வாய்ப்பு ஈஸியாகக் கிடைத்துவிட்டது. விழா ஒன்றில் கிரிஸ்டன் நடிப்பதைப் பார்த்த ஏஜென்ட் ஒருவர் டிஸ்னியில் சொல்லிவைக்க, 8 வயதில் அரிதாரம் பூசினார். அதன் பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்தவர் `பேனிக் ரூம்' படம் மூலம் பிரபலமானார். `ட்வைலைட்' மூலம் கிடைத்தது  மிகப் பெரிய ஓப்பனிங். தற்போது `லைஃப் ஆஃப் பை' படம் இயக்கிய ஆங் லீயின் அடுத்த படமான `பில்லி லின்’ஸ் லாங் ஹாஃப்டைம் வாக்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.