சினிமா
Published:Updated:

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

`த்ரிஷா இல்லனா நயன்தாரா' போட்ட ரோட்டில் இன்னொரு ஹ்யூமர் டிரைவ்.

ராயபுரத்தில் `நைனா' என்பது கலெக்டருக்கு இணையான பதவி. அந்த தாதா நாற்காலியின் வரலாறு, நீண்ட நெடியது. சமகால நைனா சரவணனுக்கு, ஆனந்திதான் ஒரே வாரிசு. அவருக்கு ஒரு அக்மார்க் அட்டாக் பாண்டியை மணம் முடித்து, விரைவில் ரிடையர்ட் ஆக நினைக்கிறார் நைனா. ஆனந்தியை லவ்ஸ் விடும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கோ, ரத்தத்தைப் பார்த்தாலே ஸ்டக் ஆன சி.டி-போல சொன்னதையே சொல்பவர். கோடம்பாக்க இலக்கணப்படி அந்த `மாணிக்க'த்தை, சூழ்நிலைகள் `பாட்ஷா'வாகக் காட்ட, நைனாவின் மகளை மணம்முடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். அடுத்த நைனாவாக ஆசைப்பட்ட ஒருவன், கடுப்பில் நைனாவையே வெட்ட, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு மாஸ் ரூபம் எடுக்கவேண்டிய கட்டாயம். அதை அவர் எப்படிச் சமாளித்தார் என்பதே இரண்டு மணி நேர `த’மாஸ் கதை.

பஜ்ஜிக்காக வெங்காயத்தை வட்டமாக வெட்டுவதுபோல், ஜி.வி.பிரகாஷ் குமாருக்காகவே ஸ்கிரிப்ட் தட்டியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். அந்தப் பிஞ்சு முகத்தில் வயலென்ஸ் ஏற்றாமல், சைலென்ஸ் ஆக்கியதற்கு ஹைஃபை நண்பா. எல்லா ஸ்டார்களின் ஆரம்பக் காலமும் இப்படி ஏதோ ஒரு டெம்ப்ளேட்டில் தான் இருந்திருக்கிறது என்பதால் ஓ.கே. ஆனால், சீக்கிரம் அடுத்த ஸ்டெப் வெச்சுடுங்க ஜி.வி.பிரகாஷ். கருணாஸின் காளகேயப் பாஷை, வி.டி.வி-யின் பிரில்லியன்ட் ஸ்கெட்ச், மொட்டை ராஜேந்திரனின் `கட்டப்பா' அவதாரம் என, படம் முழுக்க ஏகப்பட்ட காமெடி கலெக்‌ஷன்ஸ். அதில் தனியே தெரிகிறார்கள் யோகி பாபுவும் யூடியூப் சென்சேஷன் விஜய் வரதராஜும்.

கால் மணி நேரத்துக்கு ஒருமுறை திரைக்கதை நொண்டியடிக்கும் போது எல்லாம், மாஸ் காமெடி ஒன்றைவைத்து வாயடைப்பது சரிதான். ஆனால், அடுத்த நிமிடமே ரசிகனை `என்னாச்சு' என மெடுல்லா ஆப்ளங்கேட்டாவில் அடிபட்டதுபோல முழிக்கவிடுவது எல்லாம் கும்பி பாகக் குற்றம்.

இளசுகளின் ஐபேடில் நிரந்தர ரூம் போட்ட ஜி.வி.பிரகாஷ், தன் படத்துக்கே ஒரு ஹிட் பாடல்கூட போட முடியாதது சோகம்தான். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் சிறப்பு.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு - சினிமா விமர்சனம்

செம ஆக்‌ஷன் கதையின் சுமாரான காமெடி வெர்ஷன்!

- விகடன் விமர்சனக் குழு