சினிமா
Published:Updated:

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

ம.கா.செந்தில்குமார்

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

‘‘புலி வேஷக் கலைஞன், வேஷம் கட்டி ஆக்ரோஷமா ஆடும்போது கூட்டத்தில் இருக்கும் குழந்தைங்கலாம் கதறி அழும். ‘நம்மளைப் புலின்னு நினைச்சு குழந்தைங்க பயப்படுதுங்க. நாம உண்மையிலேயே அப்படி ஓர் ஆளுமை’னு அவன் நினைப்பான். ஆனா, வேஷம் கலைச்சிட்டு கூலிக்காக லைன்ல காத்திருக்கும்போது, ‘இந்தா... இந்த 500-ஐ வெச்சுக்க’னு பணத்தைத் தூக்கிப்போடுவாங்க. `நம்மளை நாம என்னவா நினைச்சுக்கிறோம்கிறதுக்கும் மத்தவங்க எப்படிப் பார்க்கிறாங்கங்கிறதுக்கும் வித்தியாசம் அப்போதான் அவனுக்குப் புரியும். ஆனாலும் அந்த மனநிலைக்கு நேர் எதிரா, ‘மத்தவங்க பார்வையில நாம யார்ங்கிறது முக்கியம் இல்லை. நம்ம முகத்தை கண்ணாடியில பார்க்கிறப்போ நம்மை நாமே ஹீரோவா ஃபீல் பண்றோமாங்கிறதுதான் முக்கியம்’னு எல்லாருக்கும் புரியவைக்கும் படம்தான் ‘கடுகு’ ’’ - நம்பிக்கையோடு பேசுகிறார் இயக்குநர் விஜய் மில்டன். ஹீரோவாக `சோலார் ஸ்டார்' இராஜகுமாரனை அழைத்துவந்து அதிரவைக்கிறார்.

‘‘ ‘கோலிசோடா’ படத்துக்கு அடுத்து நான் பண்றதா இருந்த படம் இது. அப்ப இந்தப் படத்துக்கு ஹீரோ டி.ராஜேந்தர். வேலைகள் நடந்துட்டிருந்த சமயத்தில்தான் விக்ரம் சார் என்னோடு படம் பண்ண விரும்பினார்.

‘10 எண்றதுக்குள்ள’ படம் பண்ணினோம்.’’

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

‘‘டி.ஆர் ஹீரோ என்கிற ஐடியாவே இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கே?’’

‘‘ஒருமுறை தன் படத்துக்கு கேமரா பண்ணச்சொல்லி சிம்பு கூப்பிட்டி ருந்தார். அவர் வீட்டுக்குப் போயிருந் தேன். அப்ப திடீர்னு வீட்டுக்குள் இருந்து பயங்கர சத்தம். நான் பயந்து ட்டேன். என் சந்தேகத்தைப் புரிஞ்சுகிட்ட சிம்பு, ‘அப்பா ஜிம்ல இருக்கார் சார்’ என்றார். ‘ஏன் இப்படிச் சத்தம்போடுறார்’னு நினைச்சு எட்டிப் பார்த்தப்ப, டி.ஆர் சார் வெயிட் லிஃப்டிங் இரும்பு ராடை கையில புடிச்சிருக்க, ரெண்டு பேர் வெயிட் பிளேட்களைப் போட்டுவிட அவ்வளவு என்ஜாய் பண்ணி வெயிட் லிஃப்டிங் பண்றார். அப்படியே கீழே போட்டுட்டு கண்ணாடி முன்னால நின்னு, ‘டேய்... வருவான்டா. இந்த டி.ஆர் வருவான்டா. நீ பார்க்கிறடா’ங்கிறார். எனக்கு பயங்கர ஷாக். ஒரு மனுஷன் எந்த அளவுக்கு கான்ஃபிடன்டா இருந்தா, ‘கண்ணாடியில அவரைப் பார்த்து அவரே திட்டிக்கிறார். சிம்பு, ‘இதெல்லாம் சாதாரணம் சார்’ என்றார். டி.ஆர் சார் பேசிய அந்த கான்ஃபிடன்ட் காட்சிதான் ‘கடுகு’க்கான ஆரம்ப விதை. ஆனால், சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அவரோடு படம் பண்ண முடியல. பிறகுதான் இராஜகுமாரனை ஃபிக்ஸ் பண்ணினோம். ஆனா, டி.ஆருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன்.’’

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”
“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

‘‘டி.ஆர்., இராஜகுமாரன்னு உங்களோட ஹீரோ சாய்ஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே... நண்பர்கள் என்ன சொன்னாங்க?’’

‘‘ஆரம்பத்துல இந்தக் கதையைக் கேட்ட விக்ரம் சார், ‘எனக்கு கதை ரொம்பப் பிடிச்சிருக்கு. உன் கம்பெனிக்கு நான் ஃப்ரீயா டேட் தர்றேன். நீ பயன்படுத்திக்க. நானே பண்றேன்’னு தொடங்கினவர், ஒரு கட்டத்தில் ‘நான்தான் பண்ணுவேன்’னு விடாப்பிடியா நின்னார். ‘இல்ல சார். ஏற்கெனவே பெருசா இருக்கிற ஆட்களை அழைச்சிட்டு வந்து டல் மேக்கப் போட்டு சுமாரா காண்பிக்கிறதைவிட, உண்மையிலேயே அப்படி ஒரு இமேஜில் இருக்கும் ஆளைப் பெருசா காட்டும்போதுதான் அது வீரியமான படமா வரும். அதுதான் இந்தக் கதையின் மேஜிக். அதனால இந்தக் கதைக்கு நீங்க பொருத்தமா இருக்கமாட்டீங்க’னு சொன்னேன். ‘என்னை வேணாம்னு சொல்ற ஓ.கே. அப்ப நீ யாரைத்தான் நடிக்கவைக்கப்போற?’னு கேட்டார். `இராஜகுமாரன்’னு சொன்னேன். அவருக்கு பயங்கர ஷாக். நண்பர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பு. ஆனால் அப்ப  ‘சரியான சாய்ஸ்’னு என்னை சப்போர்ட் பண்ணின ஒரே ஆள் எங்க அப்பா மட்டும்தான்.”

‘‘உங்க ஹீரோ இராஜகுமாரன் என்ன சொல்றார்?’’

‘‘‘பூவே உனக்காக’, ‘சூரிய வம்சம்’ சமயத்தில நாங்க நல்ல நண்பர்கள் அவர் விக்கிரமன் சாரோட அசிஸ்டன்ட் டைரக்டர்; நான் சரவணன் சார்கிட்ட உதவி கேமராமேன். ‘நான் படம் பண்ணும்போது நீங்கதான் கேமராமேன்’னு சொல்லியிருந்தார். `விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துட்டிருந்த சமயம். ‘என்ன ராஜ்குமார் படம் எப்படி வந்திருக்கு?’னு கேட்டேன். ‘55 நாள் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. படத்தை அப்படியே ரிலீஸ் பண்ணினாலே ஒரு வருஷம் ஓடும். இன்னும் 20 நாள் ஷூட் பண்ணித்தான் ரிலீஸ் பண்ணப்போறேன். அப்ப எத்தனை நாள் ஓடும்னு நீங்களே புரிஞ்சுக்கங்க’னு சொன்னார். ஒரு படம் ஜெயிச்சிட்டோம்ங்கிற திமிர்ல அவர் சொல்லலை. அவர் தன் ஒவ்வொரு படத்தையும் அந்த மாதிரி நம்பினார். டி.ஆருக்கு அடுத்து என் கதைக்கு இவர்தான் நெருக்கமா இருந்தார்.’’

‘‘ஓர் இயக்குநரை இயக்கியிருக்கீங்க. இராஜகுமாரன்  எப்படி நடிச்சிருக்கார்?’’

‘‘ஷூட்டிங் போறவரைக்கும் சரியா வருமான்னு வயித்துல புளி கரைச்சிட்டே இருந்தது. முதல்நாள் ஷூட்டிங். கொஞ்சம் தடுமாறினார். ஆனா, ரெண்டாவது நாளில் ‘இவங்க வேற கேக்குறாங்க. நமக்கு என்னெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் மறந்துடணும்னு முடிவுபண்ணினார். அடுத்தடுத்த நாட்கள்ல பிக்கப் ஆகிட்டார். அஞ்சாவது நாள் ஒரு சீன்... அவர் யார், அவரின் பின்னணி என்னனு கதை தொடங்கும் காட்சி. டேக்னு சொன்னதும்... பெர்ஃபாம் பண்ணிட்டே இருக்கார். கேமரா ஓடிட்டே இருக்கு. ஃபுல் ஷாட் பேசி, ரியலா அழுது, சுத்தி இருக்கிறவங்கலாம் கண்கலங்கினு கிளாப் பண்ணி கட்டிப்பிடிச்சுட்டாங்க. அன்று முதல் கடைசிநாள் வரை தினமும் சர்ப்ரைஸ் கொடுத்துட்டே இருந்தார். இந்தப் படத்தை நண்பர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டினேன். அவங்க எல்லாருமே முதலில் இராஜகுமாரன் வேணாம்னு எதிர்த்தவங்க. அவங்க இப்ப படம் பார்த்துட்டுச் சொன்ன ஒரே விஷயம், ‘இவர் இல்லாம நீ இந்தப் படம் பண்ணியிருக்கவே முடியாது' என்பதுதான்.''

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

‘‘படத்தில் பரத் வில்லனா?’’

‘‘ஹீரோவுக்கும் ஹீரோ அல்லாதவனுக்குமான முரண்தான் இந்தப் படம். ஹீரோவைவிட வயதில் பாதியா இருக்கணும். அழகிலும்  பலத்திலும் அவரைவிட டபுளா இருக்கணும். அது யாரா இருக்கலாம்னு யோசிக்கும்போது நினைவுக்கு வந்தது பரத். ஆனா, அவர் வில்லன் இல்லை. `ஒரு கதை. அதில் நீங்க ஹீரோ இல்லை’னு சொன்னேன். `எதுவா இருந்தாலும் சரி சார். நான் பண்றேன்’னு கமிட் பண்ணிட்டுத்தான் கதையே கேட்டார். பரத் பயங்கரமா மெச்சூர்டு ஆகிட்டார் என்பதை இந்தப் படத்துல நான் உணர்ந்தேன். ‘குற்றம் கடிதல்’ ராதிகா பிரசிதா, பாலாஜி சக்திவேல் சார் இப்ப இயக்கிட்டு இருக்கிற ‘ரா... ரா... ராஜசேகர்’ ஹீரோயின் சுபிக்ஷா, ‘அனிருத்’ என்ற ஒரு முக்கியமான கேரக்டரில் என் தம்பி பரத்னு எல்லாருமே கதைக்கான நடிகர்கள்.  நடிக்கிறவங்களோட நிஜமும் கன்வின்ஸிங் லெவலும்தான் படத்தைத் தூக்கி நிறுத்தும் என்பதை உணர்ந்து பண்ணியிருக்காங்க.’’

‘‘ ‘10 எண்றதுக்குள்ள’ படம் நீங்க எதிர்பார்த்த அளவுக்குப் போகலையே?’’

‘‘ஸ்ரீகர்பிரசாத், ஏகப்பட்ட தேசிய விருது வாங்கிய எடிட்டர். போலியான, பொய்யான வார்த்தைகள் சொல்லாத மனிதர். அவருக்குப் பிடிக்கலைனா, ‘நல்லா இல்லை. வேற எடுங்க’ என்பார்.

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”
“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

அப்படிப்பட்டவருக்குக்கூட அந்தப் படம் பிடிச்சிருந்தது. ரிலீஸுக்கு முன் முருகதாஸ் படம் பார்த்துட்டு, ‘மில்டன் படம் ஷ்யூர் ஷாட்’ என்றார். சமந்தா, ‘இந்தப் படத்தை நான் அவ்வளவு நம்பினேன். ஏன்னு எனக்குப் புரியவே இல்லை்’னு சொன்னாங்க. ஆனா இவ்வளவு பேரை எது முட்டாளாக்கிச்சுனு புரிஞ்சிக்க முடியலை. படம் சரியா போகலைனு தெரிஞ்சதும் விக்ரம் மெனக்கெட்டு என் வீட்டுக்கு வந்து, ‘உங்க பையன் திறமையான டைரக்டர். நீங்க கலைப்படாதீங்க’னு எங்க அப்பா-அம்மாகிட்ட சொன்னார். சினிமாவின் லாப-நஷ்டக் கணக்கைத் தாண்டிய அந்த அன்பு ஒண்ணு போதும்.

“இராஜகுமாரன் இல்லாமல் இந்தப் படம் இல்லை!”

‘உழைச்சா பலன் கிடைக்கும்னு சொல்றாங்க. அதுக்காகவாவது இந்தப் படம் ஓடியிருக்கணுமே. ஆனால், ஏன் ஓடலை?’னு ‘அழகாய் இருக்கிறாய்...’ சமயத்தில் கவலைப்பட்டேன். அதன் பிறகு, ‘கோலிசோடா’ வெற்றியோ, ‘10 எண்றதுக்குள்ள’ தோல்வியோ என்னைப் பாதிக்கலை. அது ஒரு பயணம். அவ்வளவுதான்.’’