
ஓவியங்கள்: கண்ணா

``செல்ஃபியில எல்லா தலைவர்களும் முறைச்சுக்கிட்டு இருக்காங்களே... ஏன்?''
``இது எலெக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம் எடுத்த செல்ஃபியாம்!''
- கொளக்குடி சரவணன்

``கோபமா கத்திக்கிட்டிருந்த தலைவரை என்ன சொல்லிச் சமாளிச்சீங்க?’’
`` `மணி 12 ஆச்சு'னு சொன்னோம்!’’
- அஜித்

``மேனேஜர் கிளம்பியதுமே என் ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணினேன்.”
“என்னாச்சு?”
`` `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கார்!”
- மேகி

``கதைப்படி ஹீரோ மினிஸ்டர்!''
``டைட்டில்?''
``சில நாள் கூத்து!''
- அ.ரியாஸ்

``தலைவரே என்ன சொன்னீங்க, எல்லோரும் மிஸ்டு கால் கொடுக்கிறாங்க!''
`` `கட்சியை விட்டு விலக, ஒரு மிஸ்டு கால் கொடுங்க போதும்’னு சொன்னேன்!''
- பெ.பொன்ராஜபாண்டி

`` அந்தத் தலைவர் ஊழல் விஷயத்துல `மன்னன்’ சார்!’’
``அதான் சி.பி.ஐ ரெய்டு வர்றாங்கனு தெரிஞ்சதும் எங்கேயோ போய்ப் பதுங்கிட்டாரா?’’
- சீர்காழி வி.ரேவதி

``கூட்டணிக் கதவுக்கு தலைவர் ஏன் பூஜை பண்றாரு?’’
``உள்ளாட்சித் தேர்தல்ல நல்ல கூட்டணி அமையணும்தான்!’’
- ஆர்.மணிவண்ணன்

``காலையில கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்டுக்கு 200 ரூபாய்தான் வாங்கினீங்க. இப்ப 500 ரூபாய் கேட்கிறீங்களே டாக்டர்?’’
``முதல் 100 யூனிட் `ஃப்ரீ’. அதுக்கு மேலே போயிட்டா சார்ஜ் கூடிடும் மேடம்!’’
- சீர்காழி வி.ரேவதி

``அரசியலைவிட்டு விலகலாம்னு இருக்கேன்!''
``இந்த வார்த்தை வைரல் ஆகாது தலைவரே!''
- அம்பைதேவா

``பிரதமர் கலந்துக்கிட்ட மீட்டிங்ல அவரைக் கலாய்ச்சு பாட்டு போட்டாங்களா... என்ன பாட்டு அது..?"
``அதோ... அந்தப் 'பறவை'போல வாழ வேண்டும்...’’
- அம்பைதேவா

``அவருக்கு பிஸினஸ்ல பல கோடி ரூபாய் நஷ்டமாகிருச்சு."
``என்ன வியாபாரம் பண்ணினார்?''
``எலெக்ஷன்ல நின்னார்!"
- கொளக்குடி சரவணன்

“வேலூரில் இருக்கும் வீராச்சாமி அவர்களே...பாளையம்கோட்டையில் இருக்கும் பரசுராமன் அவர்களே...”
“என்னய்யா இது?”
“வீடியோ கான்ஃபரன்ஸ் மீட்டிங்!”
- வெங்கடசுப்ரமணியன்

``இந்த வருஷத்துல இருந்து உங்களுக்கு சுக்கிர தசை ஆரம்பிக்குது!''
``ஆமாம் ஜோசியரே... புதுசா ஒரு கான்வென்ட் ஸ்கூல் ஆரம்பிக்கிறேன்!''
- கொளக்குடி சரவணன்

``தாங்கள் தினமும் ஒரு மணி நேரம் போர்ப் பயிற்சி எடுக்க வேண்டும் மன்னா!''
``அப்படியென்றால் தினமும் எத்தனை மைல் தூரம் ஓட வேண்டும்?''
- சி.ரகுபதி

``நகைச்சுவை எழுத்தாளரை கல்யாணத்துக்குக் கூப்பிட்டா இப்படித்தான்..''
``என்ன ஆச்சு..?''
``மொய் எழுதுறதுக்குப் பதிலா, ஒரு ஜோக் எழுதிட்டுப் போறார்.''
- பர்வீன் யூனுஸ்

``என்னது டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திச்சு ஒரு கோரிக்கை வைக்கப்போறியா?''
``ஆமாம்... அமெரிக்கா போய் நிறையச் சிலைகளை மீட்டு வந்திருக்கிறாரே. அதுல எங்க ஊருக்கு ஒரு பிள்ளையார் சிலை கேட்கணும்!''
-ஆ.குணசீலன்