சினிமா
Published:Updated:

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

பா.ஜான்ஸன்

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

``ஆம்பளைக்கு அர்த்தம் என்ன?’னு டிக்‌ஷனரியில எழுதவேண்டி வந்தா, `சம்பூர்னேஷ் பாபு’னுதான் எழுதுவாங்க’ என்ற இவருடைய டயலர் ட்யூனே டரியலாக்குகிறது. தெலுங்கு சினிமாவின் சமீபத்திய சென்சேஷன் `பர்னிங் ஸ்டார்' சம்பூர்னேஷ் பாபு.

ஆந்திரா ஹீரோக்கள் அத்தனைப் பேரையும் கலாய்த்து இவர் நடித்த, `ஹ்ருதய கலேயம்', தெலுங்கு தேசத்தையே கதறவைத்தது. இரண்டாவது படத்திலும் கலாய்ப்புதான்... இந்த முறை போலீஸ் படம். பவன் கல்யாணின் `கப்பர் சிங்', மகேஷ் பாபுவின் `போக்கிரி', சூர்யாவின் `சிங்கம்' என சகட்டுமேனிக்கு எல்லா போலீஸ் படங்களையும் கிழித்து எறிந்த `சிங்கம் 123'யும் சூப்பர் ஹிட். அடுத்து ட்ரிபிள் ரோல்களில் நடித்திருக்கும் `கொப்பரி மாட்டா' விரைவில் ரிலீஸ்.

ஹீரோயினைக் கிண்டல்செய்யும் ரெளடிகளிடம், பவன் கல்யாண் ஸ்டைலில் கழுத்தைத் தடவியபடி `தைரியம் எப்பிடி இருக்கும்னு தெரியுமாடா? அந்தத் தைரியத்துக்கே பயம் வந்தா, தலையணைக்குக் கீழ என்னோட போட்டோவை வெச்சுக்கிட்டுத்தான் படுத்துக்கும்' என பன்ச் போட்டு மிரட்டுவார். இன்னொரு சீனில் ராஜமௌலி படத்தில் வருவதுபோல விநோதமான ஆயுதங்களுடன் வரும் வில்லன்களை லெங்த் டயலாக் பேசி மெர்சல் செய்வார். `சிங்கம் 123'-யில் க்ளைமாக்ஸில் வில்லன் குரூப்பை மொத்தமாகக் காலிசெய்ய தனி ஒருவனாகப் போவார். வில்லன் குரூப் கத்தி, கடப்பாறை, அருவா என டெரர் காட்ட, அவர்கள் எல்லோரைவும் வாழைப்பழத்தை வைத்தே கிழித்தெடுக்கும் சம்பூவின் ஃபைட் வேற லெவல். மொத்தத்தில் யூடியூப் வழி புகழ்பெற்ற நம் ஊர் சாம் ஆண்டர்சனின் தெலுங்கு வெர்ஷன்தான் சம்பு!

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

``புடிங்க சார் அவரை'' என பர்னிங் ஸ்டாருக்கு போனைப் போட்டேன்...

``சிரஞ்சீவி, பவன் கல்யாண் தொடங்கி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் வரைக்கும் எல்லோரையும் செமத்தியாக் கலாய்க்கிறீங்களே... எப்படி உங்களை இன்னமும் விட்டுவெச்சிருக்காங்க?''

``அட, நீங்க வேற... இவங்க எல்லாருமே நான் பண்றதை என்ஜாய் பண்றாங்க. என் முதல் பட போஸ்டரைப்  பார்த்துட்டு அதைப் பெரிய லெவலில் ரீச் ஆக்கினதே இயக்குநர் ராஜமௌலி தான். அவர் ரீ-ட்வீட் பண்ணினதுக்குப் பிறகுதான் படம் கவனிக்கப்பட்டது. என் ரெண்டாவது படத்தை எழுதி,  தயாரித்தது மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு. இப்படி நிறையப் பேருடைய பாராட்டும் சப்போர்ட்டும் கிடைக்குது.''

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”
“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

``நடிப்பு மேல எப்படி பாஸ் இவ்ளோ ஆர்வம்?''

``நடிப்புனா, எனக்கு சின்ன வயசுல இருந்தே அவ்வளவு பிடிக்கும். அது ஏன்னு எல்லாம் தெரியாது. கன்னட நடிகர் உபேந்திரா என் ரோல்மாடல். எனக்கும் அவர் மாதிரியே சுருட்டை முடி. அதை அவரைப் போலவே நிறைய வளர்த்துக்கிட்டு மஞ்சள் கலர் சட்டை, சிவப்பு கலர் பேன்ட் போட்டுக்கிட்டு அலைவேன். அந்தச் சமயத்துல தான்  இயக்குநர் `ஸ்டீவன் சங்கர்' என்னைப் பார்த்தார். விநோதமா இருக்கானேனு நினைச்சிருப்பார்போல. `ஹ்ருதய கலேயம்' படக் கதையைச் சொன்னார். உடனே ஓ.கே சொல்லிட்டேன். பலரும் கோபப்படுவாங்கனு எதிர்பார்த்தோம். அதுவும் நடந்தது. அதைவிட நிறையப் பேர் அந்த காமெடியை பாசிட்டிவ்வா ரசிச்சு ஏத்துக்கிட்டாங்க.’’

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

``மூன்றாவது படத்திலேயே ட்ரிபிள் ரோல் பண்றீங்களாமே?''

``ஆமாங்க... பார்ப்பராய்டு, பெத்தராய்டு, ஆண்ட்ராய்டுனு மூணு ரோல். கிட்டத்தட்ட பெத்தராய்டு (தெலுங்கு நாட்டாமை) ஸ்டைல்ல பண்ற ஸ்பூஃப். எனக்கு லெங்த் வசனம் பேசறதுனா ரொம்பப் பிடிக்கும், அதை எல்லாம் ஈஸியாப் பேசிட்டேன். ஆனா, டான்ஸ் மட்டும்தான் கொஞ்சம் சொதப்புது. சீக்கிரம் நல்லா டான்ஸ் ஆடக் கத்துக்கணும்.''

“பார்ப்பராய்டு... பெத்தராய்டு... ஆண்ட்ராய்டு!”

``உங்களைக் கலாய்ச்சு வர்ற வீடியோ, மீம்கள் எல்லாம் பார்ப்பீங்களா?''

``பார்ப்பேன். அது எல்லாமும் அவங்க கருத்துதானே. இது எல்லாத்தையும் என் நடிப்பு மூலமா பாசிட்டிவ்வா மாத்துவேன். எனக்கு அவ்வளவு அழகான முகம் கிடையாது. ஆனா, நான் பண்ணணும்னு நினைக்கிறது சரியா போய் ரீச் ஆகுது. மக்கள் அதைப் பார்த்துச் சிரிக்கிறாங்க. அப்போ நான் என் வேலையை ஒழுங்கா செய்றேன்னுதானே அர்த்தம். என் அட்ராசிட்டிகளைத் தாங்கிக்கிற, ரசிக்கிற, வரவேற்கிற மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி!''