சினிமா
Published:Updated:

“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு!”

“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு!”

ஆர்.வைதேகி

“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு!”

`` `மெட்ராஸ்' மாதிரி, அல்லுஅர்ஜூனோடு நடித்த தெலுங்குப் படம் `சரைனோடு' மாதிரி ஹீரோயினுக்கும் நடிக்க ஸ்கோப் உள்ள படங்கள்னா நான் ரெடி'' - வாட்ஸ்அப் ஸ்மைலிகளைப்போல ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகப் பேசுகிறார் கேத்ரீன் தெரசா. ஆர்யாவுடன் `கடம்பன்' ஷூட்டிங்கில் இருந்தவரிடம் பேசினேன்.

`` `மெட்ராஸ்' படத்துல ஹோம்லியா நடிச்சுட்டு `கதகளி' படத்துல கிளாமருக்குத் தாவிட்டீங்களே?''

“ஒரு ஹீரோயினை அழகாக் காட்டுற விஷயம்தான் கிளாமர். `கலையரசி' கேரக்டர் கிளாமர்னு பா.இரஞ்சித் நம்பினார். இத்தனைக்கும் அந்தப் படத்துல எனக்கு மேக்கப்பே இல்லை. காஸ்ட்லியான டிசைனிங் டிரெஸ் இல்லை. ஆனாலும் `கலையரசி' அவ்ளோ கிளாமரா தெரிஞ்சா. அப்படிப் பார்த்தா, என் எல்லா படங்கள்லயும் நான் கிளாமராத்தான் இருந்திருக்கேன். ஆர்யாகூட இப்ப நடிச்சுட்டிருக்கும் `கடம்பன்'ல எனக்கு ட்ரைபல் பொண்ணு கேரக்டர். இதுவரைக்கும் பார்க்காத கேத்ரீனை இதுல பார்க்கப்போறீங்க. பழங்குடியினர் கேரக்டர்னாலும், என்னைப் பொறுத்தவரைக்கும் என்னை அழகா காட்டப்போற அதுகூட கிளாமர்தான்.”

``கதை, கேரக்டர், ஹீரோ, டைரக்டர், பேனர்... எதுக்கு முக்கியத்துவம்?''

``ஒரு படத்துல கமிட் ஆகும்போது இது எல்லாத்தையுமே பார்ப்பேன். ரொம்ப முக்கியம்னா, என்னோட கேரக்டர். முந்தைய படங்களோட சாயல் இருக்கக் கூடாதுங்கிறதுல கவனமா இருப்பேன். அதைவிட முக்கியம், நான் வொர்க் பண்ற டீம். நல்ல டீம் அமையுறதே ஒரு அதிர்ஷ்டம்தானே!''

“நான் இப்போ ட்ரைபல் பொண்ணு!”

``தெலுங்குலயும் ஹிட் அடிச்சிருக்கீங்களே?''

``ஆமாம். ஆந்திராவுல `சரைனோடு' பெரிய ஹிட். அல்லுஅர்ஜூன் சூப்பர் கேரக்டர். ரொம்பவே கூல்; டெடிக்கேட்டட் ஆக்டர். டான்ஸ்னா அவருக்கு அவ்ளோ பிடிக்கும். ஷூட்டிங்க்கு முன்னாடி டான்ஸுக்கு ரிகர்சல் பண்றதையும் பிராக்டிஸ் பண்றதையும் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன்.

அந்தப் படத்துல எனக்கு எம்.எல்.ஏ கேரக்டர். ஹீரோயினுக்கு இப்படி ஒரு வித்தியாசமான, போல்டான கேரக்டரைக் கொடுத்ததுக்காகவே அந்த டைரக்டருக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஆந்திராவுல எனக்கு பெரிய ஃபேன் கிளப்பை ஏற்படுத்திக்கொடுத்த இது, என் கரியர்ல ரொம்ப முக்கியமான படம்.”

``கேத்ரீன் தெரசா... ஃப்ளாஷ்பேக் ப்ளீஸ்?''

``பிறந்தது துபாயில். அப்பா ஃபிரான்க் மரியோ அலெக் ஸாண்டர், அட்வர் டைஸிங் அண்ட் மார்க் கெட்டிங்கில் இருக்கிறார். அம்மா தெரசா, ஹோம்மேக்கர். ஒரே ஒரு தம்பி கிரிஸ்டோஃபர். ப்ளஸ் டூ முடித்ததும் படிக்கிறதுக்காக பெங்களூரு வந்தோம். பி.எஸ்ஸி., பயோடெக் படித்தேன். எனக்கு எப்பவுமே ஒரே விஷயத்தைப் பண்ணிட்டிருக்கப் பிடிக்காது. புதுசு, புதுசா எதையாவது ட்ரை பண்ணுவேன்.

பெங்களூருக்கு வந்ததும், காலேஜுக்குப் போயிட்டு வர்றதைத் தவிர, எனக்கு வேற வேலை இல்லை. செம போர்... அப்பதான் மாடலிங் பண்ற ஐடியா வந்தது. ஹாபிக்காகவும் என் பாக்கெட் மணிக்காகவும் மட்டும்தான் மாடலிங் பண்ண ஆரம்பித்தேன். நடிக்கிற ஐடியா எல்லாம் சத்தியமா இல்லை. ஆனாலும் அந்த மாடலிங்தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப் படுத்தியது. `ஷங்கர் ஐ.பி.எஸ்'னு ஒரு கன்னடப் படம்தான் என்னை நடிகையாக மாற்றியது.”