சினிமா
Published:Updated:

டெல்லி டால்!

டெல்லி டால்!
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்லி டால்!

ஆர்.வைதேகி

டெல்லி டால்!

தியானா மதான்...

- மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடிக்கும் `காற்று வெளியிடை' படத்தில் அறிமுகமாகிற குட்டி நட்சத்திரம்; டெல்லி டால்!

`` `பேபி டயானா'... தியானாவை மணிரத்னம் சார் இப்படித்தான் கூப்பிடுவார். `டயானா மாதிரியே நீயும் ரொம்ப பப்ளி, ரொம்ப ஆக்டிவ், யூ ஆர் மை ஏஞ்சல்'னு சொல்வார்'' - அகமும் முகமும் மலர்கிறது தியானாவின் அம்மா ஈனா மதானுக்கு.

ஐந்து வயது தியானா, நடிகையாவதற்கு முன்னரே மாடலாகப் பிரபலம்!

``எதுவுமே ப்ளான் பண்ணி நடக்கலை. தியானாவோட க்யூட்னஸைப் பார்த்துட்டு நிறைய விளம்பரங்களுக்கு மாடலா நடிக்கக் கேட்டாங்க. தியானா எப்பவும் சூப்பர் ஆக்டிவ். ஓர் இடத்துல அமைதியா உட்கார மாட்டா. பாடுறதும் ஆடுறதும் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். நாலு வயசு இருக்கும்போது விஸ்டாரா ஏர்லைன்ஸ் அட்வர்டைஸ்மென்ட்ல நடித்தாள். அவதான் பிராண்ட் அம்பாஸிடர். அப்புறம் லெனோவா கம்ப்யூட்டர்ஸ் உள்பட ஏகப்பட்ட கமர்ஷியல்ஸ்.

டெல்லி டால்!

விளம்பர க்ளிப்பிங்ஸை புரடொக்‌ஷன் கம்பெனியைச் சேர்ந்தவங்க மணிரத்னம் சாருக்கு அனுப்பியிருக்காங்க. ரெண்டு நாள் கழிச்சு, தியானா அந்தப் படத்துக்கு செலெக்ட் ஆயிட்டதா தகவல் வந்தது. லடாக்கில் ஷூட்... கொஞ்ச நாள்லயே யூனிட்ல அத்தனை பேருக்கும் செல்லக் குட்டியாகிட்டா தியானா...'' என்கிற ஈனா, தியானாவின் கேரக்டர் பற்றி கேட்டால் `சாரி... அதை நீங்க எப்படி, எவ்ளோ அழகா கேட்டாலும் சொல்ல மாட்டேன்' எனச்  சிரிக்கிறார்.

``ஒரு மாடலா தியானா எப்படி பெர்ஃபார்ம் பண்ணுவானு எங்களுக்குத் தெரியும்.  அவளுக்கு நடிப்பு புதுசாச்சே. என்ன செய்யப் போறானு பயந் துட்டிருந்தோம். ஆனா மேடம் பின்னி எடுத்துட்டாங்க. மணி சார் ஆக் ஷன் சொல்ற வரைக்கும் எங்கேயாவது, யார்கூடவாவது விளையாடிக்கிட்டிருப்பா. ஆக் ஷன் சொன்ன அடுத்த நிமிஷம் கேமரா முன்னாடி கேரக்டராவே மாறிடுவா. தியானா ரொம்ப சென்சிட்டிவ். அடுத்தவங்க கஷ்டப்பட்டா அவளுக்குத் தாங்காது. படத்துல ஹீரோ கார்த்தி அழற மாதிரி ஒரு சீன். அதைப் பார்த்துட்டு தியானாவும் எமோஷனலாகி அழ ஆரம்பிச்சிட்டா.  அப்புறம் மொத்த யூனிட்டும் சேர்ந்து அவளைச் சமாதானப்படுத்தினாங்க.

தியானாவுக்கு தமிழ் சுத்தமா தெரியாது.  ஒவ்வொரு வசனத்தையும் இந்தி இல்லைனா இங்கிலீஷ்ல கேட்டுத் தெரிஞ்சுப்பா. ஷாட் முடிஞ்சதும், `அங்கிள் நான் கரெக்டா பண்ணினேனா... ரிப்பீட் போலாமா?'னு பெரிய மனுஷி மாதிரி கேட்பா. `நீ ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்டுடா...'னு மணிரத்னம் சார்  கொஞ்சுவார்'' - அப்பா விபுல் மதானின் பேச்சில் அவ்வளவு பெருமிதம்.

டெல்லி டால்!குட்டி இளவரசி தியானாவின் செலிபிரிட்டி ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் தீபிகா படுகோனும் ஒருவர்.

``தீபிகா படுகோன்கூட ஒரு விளம்பரம் பண்ற வாய்ப்பு வந்தது. தியானாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த தீபிகா, அவளை மீட் பண்ணணும்னு கூப்பிட்டிருந் தாங்க. தியானாவை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவகூட போட்டோ எடுத்துக்கிட்டாங்க. `உனக்கு என்ன கிஃப்ட் வேணும்?'னு கேட்டாங்க. சாக்லெட், பார்பி டால்னு எதையோ கேட்கப்போறானு நினைச்சா, `உங்க போன் நம்பர் கிடைக்குமா?'னு கேட்டா. நம்பரைக் கொடுத்துட்டு, வீட்டுக்கும் கூப்பிட்டாங்க தீபிகா. தியானாவைத் தூக்கிவெச்சுக் கிட்டு, கிஃப்ட் கொடுத்து, ரொம்ப நேரம் பேசிட்டிருந்ததை மறக்க முடியாது'' என்கிற தியானா வின் அம்மாவுக்கு மறக்க முடியாத இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது... தியானாவுக்கு மணிரத்னம் போட்டுத்தந்த ஆட்டோகிராஃப். `பெஸ்ட் ஆக்டர், டான்ஸர், சிங்கர்... ஐ ஹேவ் எவர் மெட்'னு எழுதிக் கொடுத்தார். ஷாமிலினு ஒரு சைல்டு ஆர்ட்டிஸ்ட்டை மணி சார்தான் அறிமுகப்படுத்தினாராமே. இன்னைக்கு அவங்க ஹீரோயின் ஆகிட்டதா கேள்விப்பட்டோம்.  மணி சார் மேஜிக் தியானாவுக்கும் வொர்க் அவுட் ஆகும்.''

அப்படியே ஆகக் கடவது!