சினிமா
Published:Updated:

காஷ்மோரா - சினிமா விமர்சனம்

காஷ்மோரா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மோரா - சினிமா விமர்சனம்

காஷ்மோரா - சினிமா விமர்சனம்

ன்னும் ஓர் `ஆவியும் ஆவிசார்ந்த இடங்களும்'தான் `காஷ்மோரா'.

`ஆவிகள் எங்க ஃப்ரெண்ட்ஸ்!' எனப் பொய் சொல்லும் கார்த்தியும் அவர் குடும்பமும் நிஜ ஆவிகளிடம் மாட்டிக்கொண்டதால், நிகழும் காமெடிக் களேபரங்கள் ஒரு பக்கம். ஆவிகளின் அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் மறுபக்கம். இரண்டையும் இணைத்து கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

காஷ்மோரா - சினிமா விமர்சனம்

கார்த்திக்கு `காஷ்மோரா', `ராஜ்நாயக்' என இரட்டை வேடம். காஷ்மோராவாக கலகல கார்த்தியாகவும், ராஜ்நாயக்காக லகலக வில்லனாகவும் வெரைட்டி காட்டியிருக்கிறார். அமைச்சரின் வீட்டில் `மெயின்' சாமியாரிடம் பணிவுகாட்டி நடிக்கும் காட்சியிலும், பேய் பங்களாவில் ‘இந்த செட்டப் நல்லா இல்லை... டைமிங் மிஸ் ஆகுது’ என ஒரிஜினல் பேய்களை டூப் என நினைத்து காமெடி செய்யும் காட்சிகளில் சிரிப்பாகவும், மொட்டைத் தலையும் நக்கல் சிரிப்புமாக ராஜ்நாயக் வேடத்தில் கம்பீர நெருப்பாகவும்... நடிப்பு லிஃப்ட்டில் கார்த்திக்கு ஒரு மாடி ஏற்றம்.

15 நிமிடங்களே என்றாலும் இளவரசிக்கான அத்தனை சாமுத்திரிகா லட்சணங்களுடன் நட(ன)மாடுகிறார் நயன்தாரா.  ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்குதான் திசை தெரியாப் பயணம். விவேக் முதல் துணை நடிகர்கள் வரை அனைவரும் `கொடுத்த வேலையை செமயா முடிச்சுட்டேன்ஜி' டைப்!
ஒரு கமர்ஷியல் படத்துக்கான இயக்குநர் கோகுலின் மெனக்கெடலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கூடவே போலிச் சாமியார் களையும் அவர்களுடைய தில்லாலங்கடி மோசடிகளையும் தோலுரித்துக் கலாய்த்திருப்பது பாராட்டுக்குரியது. அதே கவனத்தை திரைக்கதைக்கும் தந்திருக்கலாமே!

காஷ்மோரா - சினிமா விமர்சனம்

“காரண காரியம் இல்லாமல் இங்கே எதுவும் நடப்பது இல்லை காஷ்மோரா!” என்கிறது ஒரு வசனம். ஆனால், படம் முழுக்கக் காரண காரியம் இல்லாமல்தான் எல்லாமே நடக்கிறது. போலிச் சாமியார் என கார்த்தியை நிறுவ எவ்வ்வ்வ்வளவு நேரம். ராஜ்நாயக்-ரத்தினமகாதேவி கேரக்டர்களிலும் அழுத்தம் இல்லையே!

800 வருட பழைய ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு நிறைய சிஜி டீமும், கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கைகோத்து உழைத்திருக் கிறார்கள். ஓம்பிரகாஷின் கேமரா சுற்றிச் சுற்றி விளையாடியிருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் `ஓயா... ஓயா...'வைத் தவிர வேறு பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. பின்னணி இசையும் காலத்தை கண்முன் கொண்டுவர மறுக்கிறது.

எட்டு அடி தோண்டியிருக்கிறார்கள். இன்னும் இரண்டு அடி தோண்டியிருந்தால், தங்கம் கிடைத்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு