Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

``கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்திருச்சா... என்ன சொல்றே?’’

‘`ஏ.டி.எம்-க்குக் கிளம்பினேன்,  எதிர்ல வேட்பாளர் வந்துட்டார்.''

- கஜேந்திரன்

ஜோக்ஸ் - 1

``எதிரி நாட்டு மன்னன் புத்திசாலின்னு எப்படிச் சொல்றே?''

``நீங்க ஓடிவந்ததை ஃபேஸ்புக் லைவ்ல போட்டுட்டான் மன்னா!''

- சமர்

ஜோக்ஸ் - 1

``நமது தளபதியை  எதற்காக மன்னா உடனே மாற்ற வேண்டும் என்கிறீர்கள்?''

``போரிலிருந்து ஓடிவரும்போது, என்னை ஓவர்டேக் செய்து ஓடிவந்துவிட்டார்!''

- வ.முருகன்

ஜோக்ஸ் - 1

``குடும்பத்தோடு எங்கே கிளம்பிட்டீங்க?''

``பையன் மீம்ல வரணும்னு ஆசைப்படுறான். அதான் டிவி ஷோவுல கலந்துக்கப் போறோம்.''

- தார்மிக் லீ