
ஓவியங்கள்: கண்ணா

``இந்த `ஆப்'பை உடனே டவுன்லோடு பண்ணுங்க தலைவரே!''
``எதுக்குயா?''
``அணி மாறுகிற எம்.எல்.ஏ-க்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாமாம்!''
- கிணத்துக்கடவு ரவி

``உங்க வீட்டுக்குப் பக்கத்துல தப்புத்தப்பா ஜோசியம் சொல்லிக்கிட்டு ஒரு ஜோசியர் இருந்தாரே, இப்போ அவர் என்ன பண்றார்?''
``பத்துப் பதினைஞ்சு வாட்ஸ்அப் குரூப்புகளுக்கு அட்மினா இருக்கிறார்.''
- ஜெ.வி.பிரவீன்குமார்.

`` `நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன்'னு சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவரு இப்போ என்ன பண்றாரு?''
`` `நடிச்சாதான் ஹீரோ. ஆனா, உங்களுக்கு நடிப்பே வரலையே'ன்னு யாருமே வாய்ப்பு கொடுக்கலையாம்.''
- ஜெ.வி.பிரவீன்குமார்

``என் லவ்வருக்கு அரசியல் ஆசை வந்திருச்சுன்னு நினைக்கிறேன்டி!''
``எப்படிச் சொல்றே?''
``முன்னாடியெல்லாம் மெரினாவுக்குப் போனா பேசிட்டுதான் இருப்போம். ஆனா, இப்பெல்லாம் தியானம் பண்ண ஆரம்பிச்சுடுறார்டி!''
- ஜெ.வி.பிரவீன்குமார்.