
நித்திஷ், ஓவியங்கள்: கண்ணா

• ``என்னங்க இது, வழக்கத்தைவிட போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கு?''
``பழக்கதோஷத்துல, விஜய் மல்லையா மேட்ச் பார்க்க வந்தா லபக்னு பிடிச்சுடலாம்னுதான்.''
• ``பெட்டிங் பிரச்னையால்தான் ஏற்கெனவே ரெண்டு டீமை வெளியே அனுப்பினாங்க. அப்படியும் நீங்க திருந்தலையாய்யா?''
``அட, சும்மா இருங்க சார். நாங்க பெட் கட்டினதே இப்ப எந்த டீமை பெட்டிங் பிரச்னைக்காக வெளியே அனுப்புவாங்கன்னுதான்.''
``என்ன சார், கமென்ட்ரி பாக்ஸ் காலியா கிடக்கு. இப்படி இருந்தா எப்படி மேட்ச் நடத்துறது?''
``கமென்ட்ரி பாக்ஸ் பக்கம் வைகோ உலா வர்றதா வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதைப் பார்த்துட்டு எல்லாரும் எஸ்கேப் ஆகிட்டாங்கபோல.''
• ``ஐ.பி.எல்-போல வெளிப்படையாக ஏலம் நடத்தியிருந்தால், நாங்கள் கூவத்தூரில் அடைந்து கிடந்திருக்கவேண்டிய அவசியமே வந்திருக்காது. எனவே, அடுத்த முறையாவது ஐ.பி.எல் முறையைப் பின்பற்றுமாறு மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.''
• ``யோவ்... இதெல்லாம் வி.ஐ.பி-ங்க வர்ற இடம்யா. இங்கே எல்லாம் இப்படி வரக் கூடாது!''
``ஊரே வறண்டு கிடந்தாலும் கிரவுண்டுல மட்டும் குளுகுளுன்னு தண்ணி வரும்னு சொன்னாங்க. அதான் ஒரு ஓரமா நின்னு குளிச்சுட்டுப் போலாம்னு வந்தோமுங்க!''
• ``தலைவர் செம குஷியா இருக்காரே என்ன விஷயம்?''
`` `ஐ.பி.எல்-லில் கலந்துகொண்ட அத்தனை வீரர்களும் தொப்பி அணிந்து எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்'னு அவர் பண்ண பிரசாரத்துக்கு செம ரெஸ்பான்ஸாம்!''
• ``எப்பவும் பந்து எடுத்துத் தர கிரவுண்டுக்குள்ளதானே பசங்க இருப்பாங்க. இந்தத் தடவை என்ன கிரவுண்டுக்கு வெளியே இருக்காங்க?''
``இப்பெல்லாம் யார் பாஸ் கிரவுண்டுக்குள்ள அடிக்கிறா?
அதான் எல்லாரையும் ஸ்டேடியத்துக்கு வெளியே நிறுத்திவெச்சிருக்கோம்!''
• ``கான்பூர் கிரவுண்டில் பந்தின் பின்னாலேயே போகும் வீரர்களைக் கண்காணிக்க, `ஆன்டி பிளேயர்ஸ் ஸ்க்வாட்' அமைக்கப்பட்டுள்ளது என்பதை எங்கள் யோகியின் 201-வது அறிவிப்பாக வெளியிடுவதில் பெருமைகொள்கிறோம்.''
• ``அந்த கேப்டன், கெளதம் வாசுதேவ் மேனன் ரசிகரா... இல்லை கலாய்க்கிறாரான்னே தெரியலை.''
``ஏன் டவுட்?
இன்னிக்கு ஆடப்போறவங்க டீம் லிஸ்ட்ல ஒருத்தர் பேருக்குப் பதில் `மிஸ்டர்.எக்ஸ்'னு இருக்கு. கேட்டா `கிரவுண்ட்ல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்'னு சொல்றாரு.''