Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

“அது யாருய்யா... கட்சியில் இல்லாதவனுக்கெல்லாம் கட்அவுட் வெச்சிருக்கீங்க?”

ஜோக்ஸ் - 3

“அவர்தான் இந்தக் கூட்டத்துக்கு ஆள்களை சப்ளை பண்ணவர் தலைவரே!”

- அஜித்

ஜோக்ஸ் - 3

``தலைவர், பிரியாணிப் பொட்டலத்து மேல `பெண்'னு எழுதச் சொல்றாரே எதுக்கு?''

``அதுல முட்டைக்குப் பதிலா மூக்குத்தி, கம்மல், கொலுசுன்னு ஏதாவது ஒண்ணு இருக்குமாம்!'' 

- வேம்பார் மு.க.இப்ராஹிம்    

ஜோக்ஸ் - 3

“தலைவரே, என்ன இருந்தாலும்  `கிராமத்துல இரட்டை மின்கம்பத்துக்குக் கீழே உட்கார்ந்து படிச்சேன்'னு நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.”

- மல்லிகா குரு

ஜோக்ஸ் - 3

``திருடுபோன பொருள்கள்ல விலை உயர்ந்த பொருள் ஏதாவது இருக்கா?'' ``ஆமாம் சார்...எங்களோட ஆதார் கார்டுகள் இருக்கு!''

- வ.முருகன்