Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``இரண்டு அணிகளும் பேச்சு வார்த்தைக்கு போனாங்களே! என்ன ஆச்சு!"

"டைம் அவுட் கேட்டிருக்காங்களாம்!"

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

```தலைவர் வீட்டுல ஏன் ரெய்டு?''

``வருமானத்துக்கு அதிகமா தெர்மாகோல் பதுக்கி வச்சிருந்தாராம்!''

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 3

``உன்னோட பிறந்த நாள்தான்  நேத்தே முடிஞ்சு போச்சே...

இன்னிக்கு எதுக்கு அரை நாள்  லீவு வேணும்னு கேட்கிற..?''

``ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மொபைல் மெஸேஜ் வாழ்த்துக்களுக்கு எல்லாம் நன்றி ஸ்டேட்டஸ் போடணும் சார் அதுக்குத்தான்..!''

- ஆர்.அரிகோபி

ஜோக்ஸ் - 3

“தலைவர் வீட்டுல பிரச்சனையாம்..!”

“அவரு வீட்டம்மா கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்களா..?”

“இல்லே.. தனிக்கட்சி ஆரம்பிச்சுட்டாங்க..!”

- வேம்பார் மு.க. இப்ராஹீம்