
News
ஓவியங்கள்: கண்ணா

``தலைவர் இப்போது, பழைய பேப்பரில் ராக்கெட் செய்து விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தைப் பற்றி விளக்குவார்!''
- அ.ரியாஸ்

``தலைவர் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்தவர்...''
``அதுக்காக... `லாங் லெக்'கில் அமர்ந்திருக்கும் இளைஞரணியினரேன்னு பேசறதா..?''
- பர்வீன் யூனுஸ்

``ஊட்டி, சிம்லாதான் போவாங்க... தலைவர், சம்மருக்கு டெல்லி போறேன்னு சொல்றாரே..?''
``யோவ்... அவர் சம்மருக்காக போகல... சம்மன் வந்ததால போறாரு...''
- பர்வீன் யூனுஸ்

தலைவர், ஸ்டேட்டஸ் போட்ட அடுத்த நொடி முதல் லைக் போடும் ஒன்றிய செயலாளர் கோவிந்தை தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார் !
- அ.ரியாஸ்