
News
ஓவியங்கள்: கண்ணா

``பையன் போட்டோ ஷாப் வெச்சிருக்கிறான்னு சொல்லி ஏமாத்திட்டாங்க''
``ஏன் என்னாச்சு?”
“போட்டோ ஷாப்பை போன்ல வெச்சிருக்காங்க!”
- வி.சகிதாமுருகன்

``கட்சில என்ன பிரச்னை?''
``பிரச்னையே கட்சிதான்!''
- அம்பை தேவா

``குற்றப்பத்திரிகையைப் படிச்ச தலைவர் டென்ஷன் ஆகிட்டாரே ஏன்..?''
``இதுலயும் நடுநடுவே மீம்ஸ் போட்டிருக்காங்களாம்...''
- பர்வீன் யூனுஸ்

``அமைச்சர்கள்கிட்ட ஏதோ பயம் இருக்கு!''
``இப்ப மீம்ஸ் அவங்களைப் பற்றியும் வருது தலைவரே!''
- அம்பை தேவா