Published:Updated:

“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”

“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”

கே.ஜி.மணிகண்டன்

“2017-ல வரிசையா நான்கு படங்கள் பண்றேன். நாலும் இந்த வருஷம் ரிலீஸ். இப்படி பிஸியா நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு நடிகன், தன்னைத் தக்க வெச்சுக்க நிறைய மெனக்கெடனும். அதுக்கு நான் தயாரா இருக்கேன். இப்போ நடிச்சுக்கிட்டிருக்கிற படங்கள் எனக்கு மட்டும் அல்ல; எல்லோருக்குமே பிடிச்ச படங்களா இருக்கும்'' மெச்சூர்டாகப் பேசுகிறார் அதர்வா. `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்', `செம போத ஆகாத', `இமைக்கா நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த' என அதர்வா இப்போ செம பிஸி!

“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”

``என்ன எல்லா ஹீரோவுமே திடீர்னு தயாரிப்பாளர் ஆகிடுறீங்க?''

“ஒரு நடிகரா இண்டஸ்ட்ரியைப் பார்த்தாச்சு; ஒரு தயாரிப்பாளராவும் இந்தத் துறையைப் பார்க்கலாம்னுதான் நான் தயாரிப்பாளர் ஆனேன். ‘செம போத ஆகாத’ படத்தின் கதை இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடையது. என்னை நடிகரா அறிமுகப்படுத்திய அவர்கிட்ட, ‘படம் தயாரிக்கிறேன், கதை சொல்லுங்க’னு சொன்னேன். 18 வயசிலிருந்து 35 வயசு வரை உள்ள ரசிகர்களை மனசுல வெச்சுதான் இந்தப் படத்தைப் பண்ணியிருக்கோம். நிச்சயமா இது நெக்ஸ்ட் ஜென் படமா இருக்கும். டைட்டில்தான், ‘செம போத ஆகாத’. படத்துல துளிகூட சிகரெட்டோ குடியோ இருக்காது. நான் அதை ஆதரிக்கவும் மாட்டேன்!”

“ ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்துல ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதினு நாலு ஹீரோயின்ஸ்... போதுமா ?”

“எனக்கு ரொம்ப நாளா ரொமான்டிக் ப்ளஸ் காமெடிப் படம்  பண்ணணும்னு ஆசை. சூரி அண்ணனோடு சேர்ந்து நடிக்கிற முதல் படம் இது. படத்துல அவர்தான் சுருளிராஜன், நான் ஜெமினி கணேசன். அதாவது, சில பொண்ணுங்களை லவ் பண்ற ரொமான்டிக் ஹீரோவோடு ஒரு காமெடியனும் சேர்ந்தா, படம் எவ்வளவு ரணகளமா இருக்கும்! அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ற மாதிரி இந்தப் படம், ஒரு ஜாலி ட்ரீட்மென்ட்டா இருக்கும்.

நாலு ஹீரோயின்கள் ஏன் என்றால் கதைக்குத் தேவைப்பட்டுச்சு பிரதர்… இவர் ஹீரோ, இவர் காமெடியன், இவங்களுக்கு முக்கிய கேரக்டர்னு இந்தப் படத்துல எதுவும் இல்லை. திரைக்கதையில் ஒவ்வொருவரோட பகுதியும் அவங்களுக் கான போர்ஷனா மட்டுமே இருக்கும்.’’

“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”
“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”

“ ‘இமைக்கா நொடிகள்’ படத்துல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லன். தமிழ் சினிமாவைப் பற்றி அவர் என்ன சொல்றார்?”

“தமிழ் சினிமாவை நினைச்சுப் பெருமைப் பட்டது, அவர்கூட நடிச்சதுக்குப் பிறகுதான். என்னதான் பாலிவுட்ல பெரிய இயக்குநரா இருந்தாலும், தமிழ் சினிமாவை அவர் ரொம்பவே ரசிக்கிறார். நிறைய பேசுறார். பாலா சார், வெற்றி மாறன் சார்னு தமிழ் சினிமா இயக்குநர்களோடு ரொம்ப நட்பா பழகுறார். `கூடியசீக்கிரமே தமிழ்ப் படம் ஒண்ணு டைரக்ட் பண்ணணும்'னு அவருக்கு ஆசை. அவரோடு நடிக்கிறது மிகப்பெரிய அனுபவமா இருக்கு. நிறைய ஐடியாஸ் ஷேர் பண்ணிக்கிட்டோம். ரொம்பவே சந்தோஷமான அனுபவம் அது.”

`` `பரதேசி'க்குப் பிறகு, எந்தப் படமும் பெருசா பேசப்படலை. பிரச்னை எங்கேனு கண்டு பிடிச்சீங்களா?''

``இப்போ வெளியாகும் படங்களைப் பார்க்கும்போது, `நாம இன்னும் உழைக்கணும்'னு தோணுது. தொழில் ரீதியிலான தவறுகள் நிறைய பண்ணிட்டுத்தான், வெற்றிக்கான பாதையைத் தெரிஞ்சுக்க முடியும். நானும் அப்படித்தான். நிறைய தவறுகள் பண்ணிட்டேன். ஆனால், இதுவரை இருந்ததைவிட இப்போ நான் உடல்ரீதியாவும் மனரீதியாவும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கேன். அது, இனி வெளியாக இருக்கும் என்னோட படங்கள்ல நிச்சயம் தெரியும்.''

“நான் நிறைய தவறுகள் பண்ணிட்டேன்!”

``வீட்ல என்ன சொல்றாங்க?''

``அப்பாவுக்குப் பிறகு, அம்மாதான் எனக்கு எல்லாமே. என் படங்கள் எல்லாத்தையும் அம்மா பார்த்துடுவாங்க. சினிமா வாழ்க்கையில நான் படிப்படியா உயர்வதைப் பார்த்துட்டு, `என்ன பண்ணாலும் பெஸ்ட்டா பண்ணு'னு சொல்லி, என்னை உற்சாகப் படுத்துவாங்க. தம்பி ஆகாஷ், சிங்கப்பூர்ல பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்கிறான். படிப்பை முடிச்சுட்டு, அவனுக்குப் பிடிச்சதைப் பண்ணுவான். அக்காவுக்கு இப்போ குழந்தை பிறந்திருக்கு. குடும்பமே செம உற்சாகத்துல இருக்கு.''

``இந்தக் காதல், கல்யாணம்...?''

``காதல் பண்ணலாம் நேரம் இல்ல ப்ரோ. யார் யார்கூடவே கிசுகிசு எழுதி இப்ப போர் அடிச்சு நிறுத்திட்டாங்க. நான் ரொம்பச் சின்ன பையன். கல்யாணம்லாம் மைல்ஸ் டு கோ.''